Accident: திருவண்ணாமலையில் காரை ஓட்டிய போது கண் அசந்த மோனீஷ்குமார்! பெண் உள்பட இருவர் பலி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தனது நண்பர்களுடன் கிரிவலம் முடித்து வீடு திரும்பும் போது ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் கார் புளிய மரத்தில் மோதி முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் ஒரு இளைஞர் உள்பட இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த காங்கேயநல்லூர் பத்மா நகரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்(26), இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடன் பணிபுரியும் அதே பகுதியை சேர்ந்த மோனீஷ்குமார்(24), சஞ்சய்குமார்(23), மதுமிதா(28), குணலட்சுமி(24), காயத்ரி(24) ஆகிய 5 நபர்களுடன் நேற்று மாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு காரில் வந்துள்ளனர்.

காரை மோனீஷ்குமார் ஓட்டி வந்துள்ளார். திருவண்ணாமலையில் நேற்று இரவு கிரிவலம் முடித்துவிட்டு அதிகாலை சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது திருவண்ணாமலை அடுத்த கொண்டம் பகுதி அருகே சென்ற போது கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது.
மேலும் சாலையோரம் இடது பக்கத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த ஜனார்த்தனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் கார் ஓட்டுநர் மோனீஷ்குமார் காரிலேயே சிக்கிக் கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலசபாக்கம் காவல் துறையினர் தீயணைப்பு துறை வீரர்கள் கட்டர் மெஷின் உதவியுடன் சீட்டின் அடிபாகத்தை கட்டு செய்தனர். பின்னர் பலமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மோனீஷ் குமாரை மீட்டுள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்த சஞ்சய்குமார், மதுமிதா, குணலட்சுமி, காயத்ரி ஆகியோரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதுமிதா(28) என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் 4 நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலசப்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் நடந்த விபத்தில் இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. அப்படியே தவிர்க்க முடியாத சூழலில் எங்காவது சென்றாலும் தூக்கம் வந்தால் எங்காவது ஒரு இடத்தில் வண்டியை போட்டுவிட்டு சற்று ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications