தி.மலை, விழுப்புரம் மக்களே உஷார்! சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு.. வெள்ள அபாயம்
திருவண்ணாமலை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டிருக்கிறது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
சாத்தனூர் அணையிலிருந்து விநாடிக்கு 9,000 கன அடி நீர் திறந்துவிடப்படுவதால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இரு மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

- சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு - 119 அடி
- தற்போதைய நீர் மட்டம் - 113.40 அடி
- திறந்துவிடப்படும் நீரின் அளவு - 9,000 கனஅடி
கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் வல்லம்படுகை பகுதியில் அதிகபட்ச மழை பதிவாகி இருக்கிறது. இந்த பகுதியில் 16.48 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. காட்டுமன்னார்கோவிலில் 16 செ.மீ, கரூர் மாவட்டம் எசனூர் பகுதியில் 15.4 செ.மீ, கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியில் 15 செ.மீ அளவுக்கும் மழை பதிவாகியிருக்கிறது. வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெல்ல வடக்கு நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை என டெல்டா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இன்று டெல்டாவில் மழை இல்லை. மாறாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் தாக்கம் சென்னையிலும் எதிரொலித்திருக்கிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுகு்க விடுமுறையும் விடுக்கப்பட்டிருக்கிறது. சென்னைக்கு நீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து, கனமழை காரணமாக அதிகரித்திருக்கிறது.
அதேபோல உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தேனியில் சில வீடுகளை மழைநீர் சூழ்ந்திருக்கிறது. சேலம் மாவட்டத்திலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியிருப்பதால், உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications