Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்தை பீரோவில் வைக்க முடியல.. நகை வாங்க திருவண்ணாமலை கூட்டுறவு வங்கியில் பணம் எடுத்தவரின் நிலைமை?

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,700க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 149 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,49,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சாமானிய மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து வரும்நிலையில், தங்க கடத்தல்கள், தங்க நகை கொள்ளை சம்பவங்களும் பெருகி வருகின்றன. அந்தவகையில், திருவண்ணாமலையில் என்ன நடந்தது பாருங்க

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் உள்ளது கரியமங்கலம்.. இந்த கிராமத்தில் அஜீத் என்ற 25 வயது நபர் வசித்து வருகிறார்.

Gold Jewellery Tiruvannamalai Co operative Bank

இவர், கரியமங்கலம் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்தை நேற்றைய தினம் எடுத்துள்ளார்.. தங்க நகை வாங்குவதற்காக திருவண்ணாமலைக்கும் வந்திருக்கிறார்.. இதற்காக திருவூடல் தெருவிலுள்ள ஒரு நகை கடைக்கு சென்று, தனக்கு தேவையான நகையை தேர்வு செய்துள்ளார். அதற்குரிய பணத்தையும் கட்டிவிட்டார்.. ஆனால், கூடுதலாக ரூ.10 ஆயிரம் தேவைப்பட்டது.

தங்க நகை வாங்க கூட்டுறவு வங்கியில் பணம்

இதற்காக கூட்டுறவு வங்கியிலிருந்து தான் கொண்டுவந்த பணத்தை பைக்கில் வைத்துவிட்டு, ராமலிங்கனார் தெருவிலுள்ள ஏடிஎம் சென்டருக்கு சென்றிருக்கிறார். அங்கு ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தபோது, பைக் பெட்டி திறந்து கிடந்தது கண்டு பதறிப்போயுள்ளார்.. மேலும், பைக்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 3 ஆயிரமும் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இது தொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசில் அஜீத் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்..

நகைக்கடையிலிருந்து யாரோ மர்மநபர்கள் நோட்டமிட்டு, பின்தொடர்ந்து வந்து, இந்த பணத்தை திருடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. எனவே, திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றி விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

பீரோ லாக்கரில் தங்கம்

அதேபோல நேற்றைய தினம் விழுப்புரத்தில் அரசு பஸ் கண்டக்டர் குமார் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகையை மர்மநபர்கள் திருடியிருக்கிறார்கள்.. வெளியூருக்கு கண்டக்டர் சென்றிருந்தபோது, இதை நோட்டமிட்டு மர்மநபர்கள் பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, பீரோ லாக்கரையும் உடைத்து, அதிலிருந்த 2 சவரன் நகையை திருடி சென்றுள்ளனர்.. இது தொடர்பான விசாரணையை விழுப்புரம் மேற்கு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நகை திருட்டு சம்பவத்தை மர்மநபர்கள் நேற்றைய தினம் அரங்கேற்றி இருக்கிறார்கள்.. அந்த வீட்டில் தனியாக இருந்த ராமலிங்கம் என்பவர், பின்பக்க கதவை மூடிவிட்டு, முன்புறம் உள்ள வராண்டாவிலும், மற்றவர்கள் வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தார்களாம்.

பீரோவில் 15 சவரன் நகை

நேற்று காலை 6 மணிக்கு தூங்கி எழுந்து ராமலிங்கம் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. அத்துடன், பீரோவில் இருந்த 15.5 சவரன் நகைகள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிருப்பதை கண்டு அலறி துடித்தார்.. இது சம்பந்தமான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் தமிழகத்தில் நகை திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும்நிலையில், நேற்று ஒரே நாளில் நடந்த கொள்ளை, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+