பிஞ்சுக் குழந்தை பலாத்காரம்! திணறிப் போன திருவண்ணாமலை! எஸ்கேப்பான ஹெட்மாஸ்டரை சேஸ் செய்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் கங்கை சூடாமணி கிராமத்தில் யுகேஜி பயிலும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமையாசிரியர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன குறிப்பாக பள்ளி குழந்தைகள் பள்ளி வளாகத்திலேயே துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது

இந்நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கோவில்பட்டி அருகே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளி

தனியார் பள்ளி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தில் செயல்படும் சாந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவியை பள்ளியின் தாளாளர் பிரபாவதியின் கணவரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியரியருமான காமராஜ் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

வீட்டுக்குச் சென்ற குழந்தை தொடர்ந்து அழுவதை கண்டு பெற்றோர் உடலை பரிசோதனை செய்தபோது மர்ம உறுப்பில் ரத்தம் வருவதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியுற்றனர். மேலும் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு உள்ளதை கண்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கியதில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

போலீசார் தீவிரம்

போலீசார் தீவிரம்

இது குறித்து மாவட்ட சைல்ட் தடுப்பு அலுவலர் மூலம் தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கு சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபாவதி, போளூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் உடனடியாக ஸ்ரீ சாந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு விரைந்தனர்.விசாரனையில் பள்ளி தாளாளர் மற்றும் அவரது கணவர் ஊரில் இல்லை என தெரிந்து கொண்ட காவல் துறையினர் அவர்களது கைபேசியை டிராக் செய்த போது திருச்செந்தூரில் இருப்பதாக காண்பித்தது.

அதிரடி கைது

அதிரடி கைது

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட காவல் துறையினர் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்செந்தூர் சென்று விட்டு வரும் வழியில் திருவண்ணாமலை காவல்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் அரசு பள்ளி ஆசிரியர் காமராஜை போலீசார் எட்டயபுரத்தில் வைத்து கைது செய்து திருவண்ணாமலை காவல்துறையிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+