மேட்ரிமோனியில் வரன் பார்த்த திருவண்ணாமலை இளைஞர்.. 3 நாட்கள் தங்கிய பெண்.. இறுதியில் பெரிய சம்பவம்
திருவண்ணாமலை: திருமண தளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, அந்த தளங்களில் திருமண வரன்களைத் தேடும் நபர்களை மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் குறிவைக்கிறார்கள். பின்னர் அவர்களை தொடர்புகொண்டு, தொடர்ந்து உரையாடல்கள் மூலம் நம்பிக்கையை பெறுகின்றனர். அவர்களுடன் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டவுடன், அவர்களை ஏமாற்றுகிறார்கள்.. நகை பணத்தை திருடுகிறார்கள். திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருவண்ணாமலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் இளைஞர் ஒருவர் பேசுகையில், நான் அண்மையில் திருமணத்திற்காக மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்தேன். அதன் மூலம் என் போன் நம்பரை எடுத்து பிரியங்கா என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

நான்கு பவுன் நகையும், 3 லட்சம் 50 ஆயிரம் பணத்தையும் திருடிக் கொண்டு சென்று விட்டார். அவர் மீது புகார் அளிக்க வந்துள்ளோம். நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் எங்களை குடும்பத்துடன் காலி செய்துவிடுவோம் என்று மிரட்டினார். நாங்கள் பெரிய டீம்.. எங்களுக்கு பின்னால் வக்கீல்கள் எல்லாம் உள்ளனர். உள்ளே போய்விட்டு வெளியே வந்தாலும், குடும்பத்துடன் காலி செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள்..
வீட்டில் 3 நாட்கள் தங்குவதாக கூறி வந்தார்கள்.. முன்னதாக முதல் முறை வந்து டீ சாப்பிட்டு விட்டு போய் விட்டார்கள். இரண்டாது முறை வந்த போது என்னை பார்த்தார்கள்.. 3 நாட்கள் தங்கினார்.. மூன்றாவது நாளில் சாப்பாட்டில் என்ன கலந்தாரோ என்று தெரியவில்லை. காலையில் எழுந்து பார்த்த போது, வீடு திறந்துகிடந்தது. அவரை காணவில்லை.. வீட்டில் இருந்த பணம், நகையை காணவில்லை.. திருமணத்திற்கு வந்ததாக கூறி வந்தவர், உறவினரை பார்ப்பதாக கூறினார். எங்கள் வீட்டில் என்னை ஏமாற்றி தங்கினார்.. அதனால் தான் அவரை தங்க அனுமதித்தோம்.. அவர் தான் பணத்தை எடுத்திருக்கிறார்" இவ்வாறு குற்றம்சாட்டி பேசினார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது ஒருபுறம் எனில், மனைவிகளை இழந்த ஆண்களை குறிவைத்து திருமணம் செய்து ஏமாற்றும் சம்பவம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. அதேபோல் திருமணம் ஆகாத இளைஞர்களை ஏமாற்றியும் மோசடி செய்யும் சம்பவங்களும் நடந்துள்ளது. ராஜஸ்தானில் ஒரு பெண் 25 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த அனுராதா ஹேக் என்ற பெண், தன்னை ஒரு மணப்பெண்ணாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆண்களை ஏமாற்றியுள்ளார். திருமணத்துக்காக தீவிரமாக பெண் தேடும் நபர்களை குறிவைத்து திருமணம் செய்து, குறுகிய காலத்திலேயே அவர்களிடம் உள்ள நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளாராம். இதற்காக சில திருமண தரகர்களையும் கையில் வைத்திருந்தாராம்.
தனது வலையில் விழும் அப்பாவி ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து நகை, பணத்தை திருடிக்கொண்டு கம்பி நீட்டியுள்ளார். இந்த கல்யாண ராணியிடம் ஏமந்த பலர், தாங்கள் ஏமாந்தது பற்றி புகார் அளிக்க முன்வரவில்லை. ஆனால் ராஜஸ்தானின் சவாய் மாதோப்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு சர்மா என்பவர் சில நாட்களுக்கு முன்பு போலீசில் அளித்த புகாரின் பேரில்தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கப்பர் என்ற மற்றொரு நபரை அனுராதா திருமணம் செய்து, அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் சுருட்டிவிட்டு, தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications