அடுத்த பரபரப்பு.. விடாத வருமான வரித்துறை.. திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடையில் ரெய்டு
சென்னை: திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடை அதிபரின் வீடு மற்றும் ஜுவல்லரியில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கு அதிரடி வருமானவரிச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வருமான வரி சோதனைக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களும் தப்பவில்லை.
துரைமுருகனுக்கு நெருக்கமானவராக அறியப்படும் பூஞ்சோலை சீனிவாசன், என்பவரின் சிமெண்ட் ஆலையில் இருந்து கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
அரசியல் பிரமுகர்களுக்கு யாரெல்லாம் பணம் சப்ளை செய்கிறார்களோ அவர்களுக்கு செக் வைக்கும் விதமாக வருமான வரித்துறையினர் இந்த சோதனைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அது எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில் மட்டுமே நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இன்று திருவண்ணாமலையில் பிரபல தொழிலதிபர் கமல் சந்த் ஜெயின் என்பவரின் வீடு மற்றும் கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கமல் சந்த் ஜெயினுக்கு சொந்தமாக தேரடி தெருவில் உள்ள தாகா ஜெம்ஸ் என்ற நகை கடையிலும், அவரது வீட்டிலும், 10க்கும், மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். இது திருவண்ணாமலை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications