திருவண்ணாமலையில் 18 வயது பெண்ணை.. 42 வயது தாய் 31 வயது காதலனுடன் சேர்ந்து சத்தமில்லாமல் பண்ண சம்பவம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கள்ளக்காதலில் விழுந்த பெண் ஒருவர், தன்னுடைய மகளின் வாழ்வையே சிதைத்துள்ள கொடுமையை நினைத்து குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.. இதுதொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது திருவண்ணாமலையில்?
வந்தவாசி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. அவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்..

இவரது மனைவி சித்ரா.. 42 வயதாகிறது.. இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். மூத்த மகளுக்கு திருமணமாகி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். 18 வயதான இளைய மகள் மட்டும் தாயுடன் வீட்டில் இருந்துள்ளார்.
சென்ட்ரிங் தொழிலாளி
இந்த நிலையில், சித்ராவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான கந்தன் என்ற 31 வயது நபருக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13ம் தேதி இரவு, வீட்டில் இருந்த சித்ராவும், இளைய மகளும் திடீரென மாயமானார்கள்.
இதனால் பதறிப்போன மூத்த மகள், கீழ்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சித்ராவின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்த போது, அவர்கள் கேரள மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.
வாயில் துணி வைத்து
இதனைத் தொடர்ந்து போலீசார் கேரளாவுக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு தேயிலை தோட்ட பகுதியில் தாய், மகள் மற்றும் கந்தன் மூவரும் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரித்த போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
இளம்பெண் போலீசாரிடம் சொல்லும்போது, என்னுடைய வாயில் துணி வைத்து, என் அம்மாவும் கந்தனும் சேர்ந்து கடத்தி கொண்டு போய்விட்டார்கள்.. அங்கு எனக்கு கட்டாயமாக தாலி கட்டி, பாலியல் வன்கொடுமை செய்தார் கந்தன்.. இதற்கெல்லாம் என்னுடைய அம்மா சித்ராவும் முழுமையாக உடந்தையாக இருந்தார்" என்று கூறி கதறி அழுதுள்ளார்..
அக்காவிடம் ஒப்படைக்கப்பட்ட தங்கை
இதையடுத்து போலீசார் விசாரித்தபோது, இளம்பெண் சொன்னது அத்தனையும் உண்மை என்று தெரியவந்தது.. இதையடுத்து போலீசார் வழக்கின் பிரிவுகளை மாற்றி, ஆள் கடத்தல், கட்டாய திருமணம், பாலியல் வன்கொடுமை, பெண்ணுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் சித்ரா மற்றும் கந்தனை கைது செய்தனர்.
மீட்கப்பட்ட இளம்பெண் பாதுகாப்பாக அவரது மூத்த சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டார். தாயே மகளுக்கு எதிரியாக மாறிய இந்த சம்பவம், வந்தவாசி பகுதியில் பெரும் அதிர்வையும், சமூக அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்து
நாளுக்கு நாள் கள்ளக்காதல் அட்டகாசங்கள் இங்கே பெருகிவிட்டன.. இதனை முழுமையாக தடுத்து நிறுத்த முடியாது.. ஆனால், இந்த கள்ளக்காதல் கொடூரங்களை தடுக்க குடும்பத்திற்குள் திறந்த உரையாடலும் விழிப்புணர்வும் அவசியம். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் விரைவாக அமல்படுத்தப்பட வேண்டியிருக்கிறது..
இந்த சமூகமும் மௌனம் காக்காமல் பொறுப்புடன் தலையிட்டு பாதுகாப்பு சூழலை உருவாக்க வேண்டியிருக்கிறது.. அதிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சித்ரா போன்ற தாய்மார்கள் இருந்தால், பெண் குழந்தைகளின் கதி என்னாவது?
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications