கட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி!
ஆரணி அருகே கட்டாய தாலியை கழற்றி எறிந்தார் இளம் பெண்
Recommended Video
ஆரணி: தாலி கட்டின உடனேயே அதனை அறுத்து எறிந்துவிட்டு, தனக்கு பிடிச்ச காதலனை கல்யாணம் செய்து கொண்டுள்ளார் ஈஸ்வரி!
திருவண்ணாமலை மாவட்டம், கொடையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் ஈஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். ஈஸ்வரி அதே ஊரை சேர்ந்த பெண்தான். 5 வருடங்களுக்கும் மேலாக இவர்கள் காதலித்து வந்தனர்.

இருவரும் வேறு வேறு சாதி.. வழக்கமான எதிர்ப்பு வீட்டிலிருந்து கிளம்பியது. இதனால் ஈஸ்வரிக்கு அவரது வீட்டில் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால் ஈஸ்வரி, கட்டாய தாலியை அறுத்து எறிந்துவிட்டு, காதலன் குமாரை அழைத்து கொண்டு, ஆரணியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார். உடனடியாக சென்னைக்கும் குடியேறினார்.
இந்த விஷயம் ஈஸ்வரி வீட்டுக்கு தெரிந்ததையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள், குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், குமாரின் குடும்பத்தாரையும் ஊருக்குள் சேர்க்கக்கூடாது என்று ஒதுக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதைதவிர ஒரு லட்சம் ரூபாய் அந்த குடும்பத்தினருக்கு அபராதமும் விதித்தார்களாம்.
எனவே, ஊருக்குள் செல்ல கிராமத்தினர் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், திருமணமான தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பியிடம் மணமக்களே நேரடியாக புகார் அளித்துள்ளனர். கட்டாய தாலியை அறுத்து எறிந்துவிட்டு, இளம்பெண் ஒருவர் சாதி மறுப்பு திருமணம் செய்த கொண்ட சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications