தொகுதிக்கு 50 கோடி.. வாக்குக்கு பணம் கொடுப்பவர்களை பிடிங்க.. சீமான் காட்டம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை பிடிக்காமல் தேர்தல் ஆணையம் அப்பாவி மக்களை பிடிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்ல கெடுபிடி காட்டப்படுவதால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறினார்.

LokSabha Elections 2019: Arrest Who Give money to the vote Says Seeman

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பணம் கட்ட கொண்டு செல்பவர்களிடம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வதாகவும் கூறினார்.

ஒவ்வொரு தொகுதியிலும் 40 கோடி, 50 கோடி பதுக்கி வைத்து, வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்படுவதாகவும், இதனை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொகுதிக்குள்ளே சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

ஆனால், சாலைகளில் செல்வோரை தடுத்து பணத்தை பறிமுதல் செய்வது ஏற்புடையது அல்ல என்றும், தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, ஒவ்வொரு ஓட்டுக்கும் பணம் கொடுத்து வாங்க வருவார்கள். பணத்துக்கு ஓட்டுப் போடாதீர்கள். பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியமோ அதே போல ஓட்டும் கற்பை போல முக்கியமானது தான். அதனால் தான் உங்கள் வாக்கை விலைக்கு விற்காதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+