ஈபிஎஸ், ஓபிஎஸ் ஜெயலலிதாவின் வீரப் பிள்ளைகள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Recommended Video
திருவண்ணாமலை: எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர் செல்வமும் ஜெயலலிதாவின் வீரப்பிள்ளைகள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் தமிழகத்தில் வெற்றிடம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழகத்தில் வெற்றிடம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்மும் ஜெயலலிதாவின் வீரப்பிள்ளைகள். அவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்பிவிட்டனர்.
சசிகலா அதிமுகவுடன் இணைவாரா என்பது குறித்து முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் முடிவு செய்வார்கள். அது எந்த முடிவாக இருந்தாலும் நாங்கள் அதை ஏற்றுக் கொள்வோம் என்றார்.
சென்னையில் இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சிலைத் திறப்பு விழாவில் தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவருக்கான வெற்றிடம் உள்ளதாக ரஜினிகாந்த் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications