தானே புயல், பணமதிப்பிழப்பு விவகாரத்தை முன்கூட்டியே சொன்னவர் மூக்குப்பொடி சித்தர்
திருவண்ணாமலை: தானே புயல், பணமதிப்பிழப்பு விவகாரத்தை முன்கூட்டியே சொன்னவர் மூக்குப் பொடி சித்தர்.
டிடிவி தினகரன் மற்றும் புதுவை ரங்கசாமி, பணக்காரர்கள் பலர் மூக்குப்பொடி சித்தரின் தரிசனத்துக்கு காத்து கிடப்பர். இந்த சித்தர் யார்?
மூக்குப்பொடி சித்தரின் உண்மையான பெயர் மொட்டையக்கவுண்டர். சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம். சித்தரின் மனைவி இறந்த பிறகு, சுமார் 40 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் ஆன்மீக வாழ்வு வாழ்ந்து வந்தார்.
[டிடிவி தினகரனின் ஆஸ்தான குரு.. மூக்குப்பொடி சித்தர் காலமானார் ]

ஆசைப்பட்டதில்லை
அவர் யாரிடமும் பற்று செலுத்துவதில்லை. சொந்த ரப்பிள்ளைகளிடம் கூட ஒட்டாமல்தான் இருப்பார். என்னதான் பிரபலமாக இருந்தால் எந்த பொன், பொருளுக்கு ஆசைப்பட்டதில்லை.

அனுமதிக்க மாட்டார்
மூக்குப்பொடி அதிகம் பயன்படுத்துவதால் பக்தர்களால் மூக்குப்பொடி சித்தர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள், ஆளுமைக்குள் யாரையும் அவர் அனுமதிப்பதில்லை.

திடீரென சாப்பிடத் தொடங்குவார்
3 மாதத்துக்கு மேல் ஒரு இடத்தில் வசிக்க மாட்டார். சிதம்பரத்தில் அதிக காலம் தங்கியுள்ளார். பல நாட்கள் உணவு எடுத்துக்கொள்ள மாட்டார். திடீரென சாப்பிடத் தொடங்குவார்.

சத்தம் போடாதே
மக்களுக்கு வரும் துன்பங்களை குறிப்புகளாக முன்கூட்டியே உணர்த்தும் சக்தி கொண்டவர். இப்படித்தான் தானே புயல் தாக்க தொடங்கிய சில நாளுக்கு முன்பு, மதியம் வாக்கில் கடலூர் சென்று, கடலைப் பார்த்து ' அமைதியாக இரு, சத்தம் போடாதே' என்று பேசினார்.

நோட்டை கிழித்த சித்தர்
இதைத் தொடர்ந்துதான் தானே புயல் கடலூர் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடியது. பின்னர் கடந்த நவம்பர் 8,2016-ஆம் ஆண்டு பணம் மதிப்பு நீக்கம் அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு, நடு ரோட்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக கிழித்தெறிந்தார்.

மனதில் அமைதி
கூடங்குளம் போன்ற பெரிய போராட்டங்களையும் குறிப்பால் உணர்த்தினார். அவரின் அனுமதியில்லாமல் யாரும் சந்திக்க முடியாது. தரிசிக்க முடியாது. அனுமதி கிடைத்து சந்தித்தால் மனதில் அமைதி ஏற்படுகிறது என்கிறார்கள் பக்தர்கள்.

விரும்ப மாட்டார்
அவரை சந்தித்தாலே ஆசிதான், அவர் கண்களை திறந்தாலும் ஆசிதான். ஏன் அவர் யாரையாவது திட்டினாலும் ஆசிதான் என்கிறார்கள் அவரை பற்றி நன்கு தெரிந்தவர்கள். கோடிக் கோடியாக கொட்டி கொடுக்க பணக்காரர்கள் தயாராக இருந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்.












Click it and Unblock the Notifications