செல்போன் கொண்டு வந்ததால் ஆத்திரம்.. மாணவரை கன்னத்தில் பளார் பளார் விட்ட ஆசிரியர்- வைரல் வீடியோ
ஆரணி: ஆரணி அருகே பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்த மாணவனின் கன்னத்தில் பளார் பளார் என அறைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி அருகே பத்தியாவரத்தில் சூசை நகரில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு கட்டுக்கோப்பாக இருப்பதால் அங்குள்ள சுற்றுவட்டார பகுதியினர் இந்த பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பது வழக்கம்.

இந்த நிலையில் பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்பது விதி. அதை மீறி மாணவன் ஒருவர் செல்போன் கொண்டு வந்துள்ளார்.
இதை ஆசிரியர் பார்த்துவிட்டார். உடனே அந்த மாணவரை அழைத்த ஆசிரியர் முட்டி போட வைத்து கன்னத்தில் சரமாரியாக பளார் விட்டார். இதை அங்கு செல்போன் வைத்திருந்த இன்னொரு மாணவன் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். இதனால் இந்த வீடியோ வைரலாகியது.

மாணவர்களை ஆசிரியர்கள் கொடூரமாக அடிக்கக் கூடாது என்ற விதியிருந்தும் ஒரு செல்போன் கொண்டுவந்ததற்காக மாணவனை கண்டிக்காமல், அவனது பெற்றோரிடம் புகார் தெரிவிக்காமல் கன்னத்தில் பளார் பளார் என அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications