குழந்தை மூச்சுவிட்டபோது விசில் சப்தம்! அலறி அடித்துக் கொண்டு பேபி ஹாஸ்பிட்டலுக்கு ஓடிய பெற்றோர்
திருவண்ணாமலை: ஒரு குழந்தை மூச்சுவிடும்போது தொடர்ந்து விசில் சத்தம் கேட்டதால், அதன் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கே நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒரு எதிர்பாராத உண்மை வெளிப்பட்டது.
சிறிய குழந்தைகள், குறிப்பாக 6 மாதம் முதல் 3 வயதுடையோர், அவர்களுக்கு அருகிலுள்ள பொருட்களை வாயில் போட்டுக்கொள்வது இயல்பானது. இது வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தாலும், இந்தப் பழக்கம் சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். இதன் விளைவுகள் லேசான பாதிப்பில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலை வரை செல்லக்கூடும்.

பொத்தான், நாணயம், சிறிய பிளாஸ்டிக் துண்டுகள், கற்கள், பேனா மூடிகள், பேட்டரிகள், பொம்மை பாகங்கள் போன்ற மிகச் சிறிய பொருட்கள் சுவாசப் பாதையை அடைத்து பெரும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.
இந்த சம்பவத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த நவம்பர் மாதம் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக விசிலை விழுங்கியிருந்தது. முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது, உடல்நல பாதிப்பில்லை எனக் கூறி, விசிலை அகற்றாமலேயே குழந்தையைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஒரு மாதமாக குழந்தை மூச்சுவிடும்போதெல்லாம் விசில் சத்தம் வந்து கொண்டிருந்தது. பின்னர், மிகுந்த கவலையுடன் பெற்றோர் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கே மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் விசிலின் இருப்பிடம் உறுதியானது.
மூன்று மணி நேர தீவிர முயற்சிக்குப் பின், மருத்துவக் குழு விசிலை வெற்றிகரமாக வெளியேற்றியது. மூன்று மாதங்களாக குழந்தையின் உடலில் விசில் இருந்தபோதிலும், பெரிய அளவில் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தது ஆறுதல் அளிக்கிறது.












Click it and Unblock the Notifications