Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில்லறை பிரச்னை? இசைவாணி மீது நடவடிக்கை எங்கே? சபரிமலை பக்தர்களுக்கு பயண நிதி தேவை: அர்ஜூன் சம்பத்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: மெக்கா, மதினா, ஜெருசேலம் போன்ற பகுதிகளுக்கு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு எப்படி பயண நிதி வழங்கப்படுகிறதோ அதேபோலவே சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் தமிழக பக்தர்களுக்கும், பயண நிதி வழங்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.. பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபல தமிழ் பட டைரக்டர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருவது, "கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" என்ற இசைக்குழுவாகும்.. இந்த இசைக்குழுவில் பிரபல கானா பாடகியும், பிக்பாஸ் போட்டியாளருமான இசைவாணியும் உறுப்பினராக உள்ளார்.. இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, பாடியிருந்த ஐயப்பன் பாடல், தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.

isaivani arjun sampath

சார் ஐயப்பா: "ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி.. இப்போ காலம் மாறிப்போச்சி" என்று அந்த பாடலை பாடியிருந்த நிலையில், தற்போது ஐயப்ப பக்தர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், பா ரஞ்சித் மற்றும் இசைவாணிக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் புகார்களை தந்து வருகிறார்கள்.

அதேபோல, இசைவாணிக்கு எதிராக பாஜகவினரும் கொந்தளித்து வருகிறார்கள்.. குறிப்பாக பாஜக வழக்கறிஞர் அணி இசைவாணிக்கு எதிராக ஒன்றுதிரண்டுள்ளனர்.. இதற்கும், திமுக அரசுக்கும் தொடர்பு உள்ளது என்றும், ஐயப்பன் பாடலை வைத்து இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதை சும்மா விட மாட்டோம், போலீசில் உரிய நடவடிக்க எடுக்காவிட்டால், கோர்ட்டை நாடுவோம் என்றும் ஆவேசமாக கூறிவருகிறார்கள்.

அதானி பிரச்சனை: இது சம்பந்தமாக நிச்சயம் சட்டம் ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி, இசைவாணி மீது தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு உறுதி தந்துள்ளார். ஆனால், அதானி பிரச்சனைகளை திசைதிருப்ப இந்த சில்லறை பிரச்சனையை கையில் எடுப்பது ஏற்புடையதில்லை என்றும், இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று சொல்வது பொருத்தமானதல்ல, அது கண்டனத்துக்குரியது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இப்படி இசைவாணி விவகாரம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வரும்நிலையில், இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத்தும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்..

அர்ஜூன் சம்பத்: 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், "ஐயப்பன் குறித்த சர்ச்சைக்குரிய பாடலை பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பா ரஞ்சித்.. அவர்தான் மதங்களுக்கு இடையே, ஜாதிகளுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார்.. அதனால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இப்போது மறுபடியும் திருவண்ணாமலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மறுபடியும் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அப்போது அவர் சொல்லும்போது, உலக மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் சபரிமலை அய்யப்ப சுவாமியை பற்றி, பாடகி இசைவாணி அவதூறாக பாடியது பக்தர்களின் மனது புண்படும் வகையில் உள்ளது. அவரது பாடலை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு பவனம் : மெக்கா, மதினா, ஜெருசேலம் போன்ற பகுதிகளுக்கு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு எப்படி பயண நிதி வழங்கப்படுகிறதோ அதேபோலவே சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் தமிழக பக்தர்களுக்கும், பயண நிதி வழங்க வேண்டும். கேரள மாநிலம் சபரிமலையில் அய்யப்ப சாமி கோவில் அருகாமையில் தமிழ்நாடு பவனம் கட்டி தமிழக பக்தர்கள் சென்று தங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு, தமிழகத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கோரிக்கையின் பரபரப்பே இன்னும் அடங்கவில்லை.. ஏற்கனவே தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும் கோவையை தலைமை இடமாகக் கொண்டு கொங்கு மாநிலம் பிரிக்க வேண்டும் என்றும் குரல் எழுந்து வரும் நிலையில், அர்ஜுன் சம்பத்தும் இதே கோரிக்கையை விடுத்துள்ளார்.

பரபரப்பு: தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்றும் கொங்கு பகுதி, தென்தமிழகம் மற்றும் மீதமுள்ள பகுதி என மூன்றாக பிரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளது பரபர விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நடுவில் இசைவாணி விவகாரம் சேர்ந்து கொண்டுள்ளது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+