திருவண்ணாமலைக்கு மகிழ்ச்சி.. வேலூருக்கும் வந்தாச்சு நற்செய்தி.. தமிழக அரசு அசத்தல்.. பூரிக்கும் குஷி
திருவண்ணாமலை: அரசுப்போக்குவரத்துக்கழகத்தின், விழுப்புரம் கோட்டம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கமான ஒன்று.. இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது.

அமாவாசை: இதுமட்டுமல்லாமல், ஆடி மாதம், ஆடி அமாவாசை, வேளாங்கண்ணி கொடியேற்றம், நாகூர் தர்கா கந்தூரி விழா, என ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளின்போதும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பஸ்கள் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் தேவையை கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கிலும் தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அந்தவகையில், திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. எப்போதுமே, பவுர்ணமியன்று திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். எனவே, பக்தர்களின் வசதிக்காக வேலூர் மண்டலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அடிக்கடி சிறப்பு பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இயக்கி வருகிறது.
பௌர்ணமி: மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு உகந்த நேரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது,.. அந்தவகையில் இன்று, அதாவது பிப்ரவரி 23-ம் தேதி வெள்ளிக்கிழமை, மாலை 4.22 மணிக்கு ஆரம்பித்து, நாளை சனிக்கிழமை மாலை 6.18 மணி வரை பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருக்கிறது.
திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த கிரிவலத்தில் பங்கேற்க வழக்கம்போல், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள். எனவே, இன்றும், நாளையும் பக்தர்களின் வசதிக்கா 1,084 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை: இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பவுர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தா்கள் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக பக்தா்கள் வசதிக்காக, பிப்ரவரி 23-ம் தேதி 682 சிறப்பு பேருந்துகளும், 24-ம் தேதி 502 சிறப்புப் பேருந்துகளும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தால் இயக்கப்பட உள்ளன.
பிப்ரவரி 23-ம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 275 சிறப்பு பேருந்துகளும், காஞ்சிபுரத்திலிருந்து 40, புதுச்சேரியிலிருந்து 30, பெங்களூரிலிருந்து 20, வேலூரிலிருந்து 55, திருச்சியிலிருந்து 50, சேலத்திலிருந்து 50, ஓசூரிலிருந்து 50, கிருஷ்ணகிரியிலிருந்து 20, தருமபுரியிலிருந்து 30, மற்ற வழித்தடங்களிலிருந்து 62 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 682 பேருந்துகள் இயக்கப்படும்.
வேலூர்: பிப்ரவரி 24-ம் தேதி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 125, காஞ்சிபுரத்திலிருந்து 20, புதுச்சேரியிலிருந்து 20, பெங்களூரிலிருந்து 20, வேலூரிலிருந்து 55, திருச்சியிலிருந்து 50, சேலத்திலிருந்து 50, ஓசூரிலிருந்து 50, கிருஷ்ணகிரியிலிருந்து 20, தருமபுரியிலிருந்து 30, மற்ற வழித்தடங்களிலிருந்து 62 என மொத்தம் 502 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும்.
அத்துடன் பயணிகள் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்கவும் தேவையான அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது, பக்தர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications