'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை
திருவண்ணாமலை: மின் வெட்டுக்கு எதிராக தலைமைச் செயலகத்தில் போராட்டம், முதல்வரின் வீட்டில் போராட்டம் என்பது 15 நாட்களுக்குள் நடைபெற்றது விஜய் ஆட்சியில் தான் நடந்துள்ளது. பவர் அளித்த தமிழக மக்களுக்கு மின்வெட்டை பரிசாக வழங்கியுள்ளது தவெக அரசு எனவும், தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைந்திருக்கிறது என்று ஆதவ் அர்ஜுனா சொல்வது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தெலுங்கானா முன்னாள் ஆளுநரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," தமிழக வெற்றிகழகம் தமிழகத்தில் பிள்ளை பிடிப்பது போல் மாற்று கட்சியினரை பிடிக்கிறார்கள்.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி 15 நாட்களில் நடக்கும் பிரச்சனைகளை கடந்து செல்ல முடியுமா என்று தெரியவில்லை பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. மக்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் தமிழக வெற்றி கழகம் முன்பு செய்தவர்கள் தவறை மீண்டும் செய்து விடக்கூடாது.
15 நாட்களில் தமிழக வெற்றி கழகத்தால் நிர்வாகத்தை சீரமைக்க முடியவில்லை, மாற்றுக் கட்சியினரை அழைத்து சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களின் நம்பிக்கையை பெரும் அளவிற்கு ஆட்சி செய்யுங்கள். தமிழக வெற்றிக் கழகம் தொலைநோக்கு பார்வையோடு செயல்பட வேண்டும். மற்ற கட்சி நிறை தங்கள் கட்சியை சேர்ப்பது அதிக கவனம் காட்டக்கூடாது.
தமிழக வெற்றி கழகம் மீம்ஸ் மூலமாக கோரிக்கை வைப்பதை பார்க்கும்போது தமிழகம் எங்கு செல்கிறது என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது. தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. தமிழக முதல்வர் இதனை சரி செய்ய வேண்டும் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள். பாரதப் பிரதமர் தமிழக அரசுக்கு முழுமையான ஆதரவு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
திருமாவளவன் யாரோடு இருக்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் என்ன அரசியல் சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று குழப்பத்தில் உள்ளார்கள். பல்வேறு குழப்பமான நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சியினர் உள்ளனர்.
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு தமிழக மக்கள் பவர் கொடுத்துள்ளனர். ஆனால் மின்வெட்டை தமிழக மக்களுக்கு கொடுத்து வருகின்றனர் என விமர்சனம். இந்தியா முழுவதும் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள கட்சி பாஜக. பாஜக தோல்வியிலிருந்து மீண்டு எழுந்த கட்சி. தோல்வி அடைந்தவன் அந்த கட்சி இந்த கட்சி என்று சொல்லக்கூடியவர்கள் எங்கள் கட்சியில் இல்லை. அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்கள் பதவி ஆசைக்காக செல்பவர்கள்.
அப்படி சென்று விட்டு மக்களுக்காக செல்கிறோம் என்று சொல்கிறார்கள். பதவி ஆசைக்காக செல்கிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். ஆதலால் தான் சொல்கிறார். அனைவருக்கும் பதவி அனைவருக்கும் எல்லாம் என கூறி வருகிறார். தமிழக வெற்றி கழகத்தில் தனது துறையே எது என்று தெரியாமல் செய்தியாளர்களை சந்திக்கிறார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் பதிலளிக்காமல் மற்றொருவர் சொல்வதை எழுதிக் கொள்ள சொல்கிறார். பெண்ணுக்கு ஏற்பட்ட அநீதியை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகிறீர்.. சிரிப்பது வேதனைக்குரியது.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைந்திருக்கிறது என்று ஆதவ் அர்ஜுனா சொல்வது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான்கு எம்எல்ஏக்கள் எந்தவித கொடுக்கல் வாங்கலும் இல்லாமல் அப்படியே சென்று சேர்ந்து விட்டார்களா? இந்த ஏற்பாடுகள் தான் ஊழல் அனைவரும் காதில் பூ சுற்றிக் கொண்டே இருக்கிறார்களா? ஆதவ் அர்ஜுனா மீது முதலமைச்சரே கோபத்தில் இருப்பதாக தனக்கு தகவல் வருகிறது.
மின் வெட்டுக்கு எதிராக தலைமைச் செயலகத்தில் போராட்டம், முதல்வரின் வீட்டில் போராட்டம் என்பது 15 நாட்களுக்குள் நடைபெற்றது விஜய் ஆட்சியில் தான் நடந்துள்ளது. பவர் அளித்த தமிழக மக்களுக்கு மின்வெட்டை பரிசாக வழங்கியுள்ளது தவெக அரசு. தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது.












Click it and Unblock the Notifications