திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது ஒரு வடை 100 ரூபாயா.. செங்கத்தை அதிர வைத்த பரபரப்பு நிகழ்வு

பக்தர்கள் சுட்ட வடை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    செங்கத்தை அதிர வைத்த பரபரப்பு நிகழ்வு

    திருவண்ணாமலை: ஒரு வடை 100 ரூபாய்... எங்கே தெரியுமா? ஏன் தெரியுமா? எல்லாம் ஒரு நல்ல விஷயத்துக்காகத்தான்!!

    செங்கம் அருகே உள்ள முருகன் கோவில் ரொம்ப விசேஷமானது. இங்கு கடந்த 10 நாட்களாக தைப்பூச திருவிழா நடைபெற்று வந்தது.

    Temple Prasad Vada is selling for Rs.100

    இதனால் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நாக்கில் அலகு குத்துவது, முதுகில் அலகு குத்துவது, கால்களில் அலகு குத்தி கயிறு மூலம் அந்தரத்தில் தொங்குவது என எத்தனையோ நேர்த்திக்கடன்களை செய்து வந்தனர்.

    அதில் ஒரு வினோத வழிபாடுதான் பக்தர்கள் கொதிக்கும் எண்ணையில் வடை சுட்டு எடுத்தது. ஒரு பெரிய வாணலில் எண்ணெய்யை காய வைத்து அதில் வடைகளை தட்டி போடுகிறார்கள் பக்தர்கள். பிறகு எண்ணெய் சட்டிக்குள் வெறும் கையை உள்ளே விட்டு வெந்து கொண்டிருக்கும் வடைகளை வெளியே எடுக்கிறார்கள்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த வடையை சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதுதான் இதன் மற்றொரு சிறப்பு. அதனால் இந்த வடைகளை கோவில் நிர்வாகம் சன்னிதானத்திலேயே பக்தர்களுக்கு விற்பனை செய்தது.

    இந்த வடைக்கு 'சுவாமி வடை' என ஒரு பெயரும் வைத்து பக்தர்கள் பயபக்தியுடன் வாங்கி சென்றனர். அதனால்தான் ஒரு வடையின் விலை ரூ.100 என்று விற்பனை ஆனது

    English summary
    Near Chengam Temple Vada is selling for Rs.100. Many Devotees took Prasad Vada with enthusiasm for Thaippusaiyam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X