திருவண்ணாமலையில் IT கம்பெனி சுகந்திக்கு 44 வயசு.. வாடகை வீட்டில் வொர்க் ஃப்ரம் ஹோம்! கொடுமைய பாருங்க
திருவண்ணாமலை: சமீபகாலமாகவே இளைய தலைமுறையின் தற்கொலைகள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.. பிரச்சனைகளை சமாளிக்கும் பொறுமை, பக்குவம் இல்லாதது, சிரமங்களை எதிர்கொள்ள முடியாதது போன்றவையே இந்த தற்கொலைகளுக்கு காரணங்களாகின்றன என மனநல மருத்துவர்களும் கவலையுடன் கூறுகிறார்கள். ஆனால், படித்த, பட்டதாரியான, கைநிறைய சம்பாதிக்கும் சில வயது முதிர்ந்த பெண்களும் தற்கொலை முடிவை எடுப்பது, துயரத்தை தந்து வருகிறது. திருவண்ணாமலையில் என்ன நடந்தது?
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்காலம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், இவரது மனைவி உமா தேவி(வயது 25), மகள் மோகனாஸ்ரீ (2) பெற்றோருடன் வசித்து வந்தனர்.

4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாஸ்ரீயும் கடந்த ஜூன் 24ம் தேதி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர்.
பெண் குழந்தை
அதாவது, இந்த தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருக்கிறதாம். மீண்டும் உமா தேவி கர்ப்பமானதால், மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ? என்று பயந்து கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று கண்டறிய விக்னேஷ் முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதியிலுள்ள, தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவி அழைத்து சென்று ஸ்கேன் செய்தபோது, கருவில் இருப்பது பெண் சிசு என்பது தெரிந்துள்ளது.. இதனால் கருவை கலைக்க உமாதேவியை வற்புறுத்தி கொண்டேயிருந்தார்களாம்.. இந்த கொடுமையை ஒருகட்டத்தில் தாங்காமல்தான் உமாதேவி தற்கொலை செய்ததாக கூறுகிறார்கள்..
தற்கொலைக்கு உமாதேவியை தூண்டியதாக விக்னேஷ், சாரதி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்கேன் சென்டரை அறிமுகம் செய்து வைத்தது, அதே ஊரை சேர்ந்த இந்த சாரதி என்பவர்தானாம்.. தமிழ்நாட்டில் ஸ்கேன் சென்டர்களில் இப்படியான தகவல் தரப்படுவதில்லை என்பதால், பக்கத்து மாநிலத்துக்கு இவர்கள் சென்றிருக்கிறார்கள்..
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்காத நிலையில், மற்றொரு பெண் திருவண்ணாமலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பட்டதாரி பெண்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் ரம்யா சுகந்தி.. 44 வயதாகிறது.. எம்பிஏ பட்டதாரி ஆவார்.. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது தன்னுடன் பணிபுரிந்த ஜெகந்நாதன் என்பவரை காதலித்து, அவரையே திருமணமும் செய்து கொண்டார்.. ராணிப்பேட்டை ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகந்நாதன்.. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை..
கருத்து வேறுபாடுகள்
நாளடைவில் தம்பதிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. எனவே, கடந்த சில வருடங்களாகவே தம்பதி இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.. அந்தவகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேரன் நகர் பகுதியில், வாடகைக்கு குடிவந்துள்ளார் ரம்யா சுகந்தி.. இவர் மட்டும்தான் இந்த வீட்டில் வசித்து வருகிறார்..
ஐடி கம்பெனி ஒன்றில் தற்போது வேலை பார்க்கிறார்.. எனவே, வீட்டிலிருந்தே வொர்க் ஃப்ரம் ஹோம் பணியில் இருந்துள்ளார்..
வொர்க் ஃப்ரம் ஹோம்
இந்நிலையில், சுகந்தியின் வீட்டிலிருந்து திடீரென நேற்று துர்நாற்றம் வீசியிருக்கிறது.. இதனால் அக்கம்பக்கத்தினர், சுகந்தி வீட்டு கதவை தட்டியிருக்கிறார்கள்.. ஆனால், கதவு உள் பக்கமாக பூட்டியிருந்தது.. இதனால் சந்தேகம் அடைந்த, அக்கம்பக்கத்தினர் உடனடியாக, திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் தந்துள்ளனர்..
இதையடுத்து, போலீசாரும் உடனடியாக விரைந்து வந்து, சுகந்தி வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. அங்கே சுகந்தி தூக்கில் தொங்கி கொண்டிருந்த்ர்.. அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது.. தற்கொலை செய்து 4 நாட்கள் ஆகியிருக்கும் என்கிறார்கள்.. இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிதாபம் - துயரம்
பின்னர், ரம்யா சுகந்தியின் மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, சுகந்தியின் உறவினரான சென்னையில் வசிக்கும் ஜெயபிரகாஷ் என்பவர், இது தொடர்பாக போலீசில் புகார் தரவும், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
எம்பிஏ படித்து, ஐடி கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்கும் சுகந்தி ஏன் இறந்தார் என்று தெரியவில்லை.. வாழ்வில் ஏற்பட்ட விரக்தி காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications