திரு திரு திருவண்ணாமலை.. வயல்வெளியில் பெண்ணை சீரழித்த பாஜக பிரமுகர்.. கடைசியில் பார்த்தால்.. ஷாக்
திருவண்ணாமலை: விவசாய நிலத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.. இந்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
பெண்கள் மீதான வன்கொடுமைகள் வடமாநிலங்களில் அதிகரித்து காணப்படுகிறது.. அதிலும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.

அதிலும் உத்தரபிரதேசத்தை நினைத்தாலே ஈரக்குலையே நடுங்குது.. "ராமராஜ்ஜியம் அமைப்போம் என்று சொன்னால் மட்டும் போதுமா? பெண்களுக்கு முதலில் பாதுகாப்பை வழங்குங்கள்" என்று எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தபடியே வருகின்றன. இதோ நேற்றுமுன்தினம்கூட ஒருவருக்கு தண்டனை தரப்பட்டுள்ளது..
உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜகவை சேர்ந்தவர் ராம்துலார் கோந்த்.. துத்தி தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர்.. கடந்த 2014-ல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் நடைபெற்று வந்த நிலையில், இப்போது, சிறை தண்டனையை பெற்றிருக்கிறார்.
தண்டனை மட்டுமல்ல, தண்டனை காலம் முடிந்த பிறகு, அவரால் 6 வருஷங்களுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது.. இப்போது எம்எல்ஏ பதவியும் பறிபோயுள்ளது.. ஆளும் கட்சி எம்எல்ஏவே, தண்டனை பெற்றிருப்பது ஜெயிலுக்கு போயிருப்பது, அம்மாநிலத்தில் கடும் விமர்சனத்தை தந்து வருகிறது.
தமிழகம்: இந்நிலையில், நம்முடைய தமிழகத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கரியமங்கலம்.. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் செல்வி.. இவரது கணவர் சீனுவாசன்.. 55 வயதாகிறது.. (55) பாஜவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளராக பணியாற்றியவர்.. இப்போது, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வேறு பொறுப்பு வழங்க இருந்ததாக சொல்கிறார்கள்.
இந்நிலையில், சீனுவாசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பேயாலம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமஜெயம் என்பவர், வேலை பார்த்து வருகிறார்.. விவசாய நிலத்திலேயே, மனைவி, 2 குழந்தைகளுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவிக்கு 22 வயதாகிறது..
பச்சையம்மாள்: இவர்களுடன், ராமஜெயத்தின் அப்பா பெருமாள், அம்மா பச்சையம்மாளும் ஒன்றாகவே வேலைபார்த்து வருகிறார்கள். இந்நிலையில் சீனுவாசன், ராமஜெயத்தின் மனைவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு தந்து வந்ததாக தெரிகிறது.. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து கணவன் ராமஜெயத்திடம் கண்ணீர்மல்க சொல்லி உள்ளார்.
அதற்கு அந்த ராமஜெயம், "அவர்தான் நமக்கு முதலாளி.. நிலத்தின் ஓனர் சொல்வதை போலவே, கேட்டு நடந்துக்கோ" என்று கணவன், மாமனார், மாமியார் ஆகியோர் வற்புறுத்தியிருக்கிறார்கள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண், அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனிடையே,, சில நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்திலேயே, சீனுவாசன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
உடந்தை: இந்த அக்கிரமத்துக்கு பெண்ணின் கணவன் மற்றும் பெற்றோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.. இதனால் கொந்தளித்து போன அந்த பெண், செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்தார். இதில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பாஜக பிரமுகர் சீனுவாசன், அவருக்கு உடந்தையாக இருந்த ராமஜெயம், பெருமாள், மற்றும் பச்சையம்மாள் ஆகியோரை அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள்.. விசாரணையும் நடந்துவருகிறது.












Click it and Unblock the Notifications