ஒரே ஒரு சிசிடிவியால்.. 2 குடும்பமே போச்சே.. அம்மாவிற்காக ஓடி வந்த மகன்கள்.. பட்டென நடந்த கொடூரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிசிடிவி காரணமாக நடைபெற்ற கொலை ஒன்று இரண்டு குடும்பங்களையே சின்னாபின்னமாக்கி உள்ளது.
திருவண்ணாமலை கீழ் பென்னாத்தூர் அருகே கிராமத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த பகுதியில் வசித்து வருபவர் வேலுசாமி.

விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யும் வேலுசாமி நல்ல வசதி படைத்தவர். இவருக்கும் அண்டை வீட்டில் வசிக்கும் சாந்தி என்பவரின் குடும்பத்திற்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இவர்களுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இந்த தகராறு காரணமாக இரண்டு தரப்பிற்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இந்த சண்டை காரணமாக இரண்டு தரப்பும் பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் கூலி வேலை பார்க்கும் சாந்தி வேலைக்கு சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்கு முன் திரும்பி வந்துள்ளார். அப்போது வேலுசாமி தனது வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொறுத்தி இருக்கிறார்.
அதில் ஒரு கேமரா சாந்தி வீட்டை நோக்கி இருந்துள்ளது. இதை பார்த்ததும் கோபம் அடைந்த சாந்தி.. எங்க வீட்டை பார்த்து ஏன் கேமராவை வைத்து இருக்கிறாய் என்று கேட்டு சண்டை போட்டுள்ளார். இதற்கு வேலுசாமி கோபமாக நான் எங்கே வேண்டுமானாலும் சிசிடிவி கேமராவை வைப்பேன். உன் வீட்டிலா வைத்து இருந்தேன் என்று கோபமாக கேட்டு இருக்கிறார்.
இதனால் இவர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வாக்குவாதம் காரணமாக இவர்கள் இருவரும் மாறி மாறி தாக்கிக்கொள்ள தொடங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் சாந்தியை வேலுசாமி மம்பட்டி எடுத்து தாக்க தொடங்கி உள்ளார். சாந்தியின் காலில் மம்பட்டியை வைத்து தாக்கி உள்ளார்.
இதை பார்த்ததும் கோபம் அடைந்த சாந்தியின் மகன்கள் வேலு மற்றும் சந்தோஷ் இருவரும் கோபமாக போய் வேலுசாமியை தாக்கி உள்ளனர். அதோடு அவரின் கையில் இருந்த மம்பட்டியை பிடுங்கி அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். வேலுசாமி வீட்டில் இருக்கும் மேலும் இருவரும் இந்த தாக்குதலில் கடுமையாக காயம் அடைந்தனர்.
இங்கே ஒரு குடும்பமே சிசிடிவியால் நாசமான நிலையில், இன்னொரு பக்கம் சாந்தியின் மகன்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் அவர்களை தேடி வருகின்றனர் .












Click it and Unblock the Notifications