திருவண்ணாமலை தீப திருவிழா.. இலவச பேருந்து சேவையை நிறுத்த திடீரென உத்தரவிட்டது யார்?பக்தர்கள் கேள்வி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் வழக்கம் போல் இலவச பேருந்து சேவை திடீரென துண்டிக்கப்பட்டதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முதல் நாள் கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஞாயிறு அன்று நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையாரின் தீபத்தை பார்க்க தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்றனர். சென்னை, முதல் கன்னியாகுமரி வரை எல்லா ஊர்களிலும் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அப்படி இயக்கப்பட்ட பேருந்துகள் நகருக்குள் அனுமதிக்கப்படவில்லை.. நகரைச் சுற்றிலும் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கேயே இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து கோயில் செல்ல 180 இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன.
வெளியூர்களில் இருந்து இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இலவச பேருந்து சேவை நடந்து வந்தது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இறக்கிவிடப்பட்ட பக்தர்கள் இலவசமாக கோயில் வரை பயணித்தனர் ஆனால் இந்த இலவச பேருந்து சேவை என்பது நண்பகல் 12 மணி முதல் படிப்படியாக குறைந்துவிட்டது
மாலை 4 மணிக்கு பிறகு இலவச பேருந்து சேவையே இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கோயில் அருகே வருவதற்கு ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆட்டோக்களை அதிக கடட்ணம் வசூக்கப்பட்டது பொதுமக்கள் அவதி அடைந்தனர். 4 பேர் குடும்பமாக வந்தால் 300 ரூபாய் முதல் 500 வரை பயணிகள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கூடுதல் கட்டணம் வசூலித்த ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கையும் அன்றைக்கு எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
பொதுவாகவே கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இயக்கப்படும் இலவச பேருந்து சேவை என்பது பிற்பகல் 2 மணிக்கு பிறகு முடிவுக்கு வந்து விடுவது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டினர். திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ், போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம், மைச்சர் எ.வ.வேலு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் என எல்லாருமே பக்தர்களின் நலன் கருதி தடையின்றி இலவச பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்த போதும், பிற்பகலுக்கு பிறகு இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டது ஏன், அரசின் உத்தரவை மீற அனுமதித்தது யார்? என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications