திருவண்ணாமலையில் தங்க நகைக்காக.. ஆபாசத்தை கையில் எடுத்த 2 பெண்கள்.. இப்படி கூட எங்காச்சும் நடக்குமா?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.. இது தொடர்பான விசாரணையை 2 பெண்களிடமும் போலீசார் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. தண்டராம்பட்டில் என்ன நடந்தது?
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது..

சிலசமயங்களில் ஆண் குழந்தைகளையும் பெண்களிடமிருந்து பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.. அந்தவகையில், ஆண், பெண் இரு தரப்புமே போக்சோவில் கைதாகும் அவலம் நம்முடைய நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
கைதாகும் பெண்கள்
மற்றொருபுறம் பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகி, அப்பெண்ணை அழிக்கும் அபாயம் நடக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, வரதட்சணை கொடுமைக்காக, தன்னுடைய மருமகளுக்கு எச்ஐவி ஊசியை செலுத்தி, நோயை உண்டாக்கியிருக்கிறார் அந்த மோசமான மாமியார்.
அதேபோல, தன்னுடைய 32 வயது கணவர், நீண்ட ஆயுடன் வாழ வேண்டுமானால், சிறுமியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு ஜோசியக்காரர், சொன்னாராம். உடனே அந்த 25 வயது மனைவி, அந்த பகுதியில் தெருவில் விளையாடி கொண்டிருந்த 14
வயது சிறுமியை கடத்தி கொண்டுபோய், தன்னுடைய வீட்டிலுள்ள அறையில் தள்ளி, அந்த அறைக்குள் தன்னுடைய கணவரையும் உள்ளே வைத்து பூட்டியிருக்கிறார். அந்த கணவர், 14 வயது குழந்தையை பலாத்காரம் செய்துள்ளார். இந்த தேனி தம்பதிக்கு, நேற்றுதான் 20 வருடம் கடுங்காவல் தண்டனை கிடைத்துள்ளது.
திருவண்ணாமலை கொடுமை
இதோ திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி.. இவரது மனைவி பழனியம்மாள்.. 47 வயதாகிறது.. இவர் 18 வயதுடைய பெண் ஒருவருடன் நட்பாக இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து, 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமியையும், சிறுவனையும் தனித்தனியாக ஆபாசமாக வீடியோ எடுத்திருக்கிறார்கள்..
அதிர்ச்சியில் பெற்றோர்
பிறகு, தான் இந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், ஒரு பவுன் நகை வேண்டும் என்று, 2 பெண்களும் சிறுமியை மிரட்டியிருக்கிறார்கள்.. அத்துடன் அந்த ஆபாச படத்தை சிறுமியின் அக்காவிற்கும், உறவினர் பெண்ணுக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளனர்.. அப்போதுதான் சிறுமியின் பெற்றோருக்கே இந்த விவகாரம் தெரிந்து, கடுமையான அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து தண்டராம்பட்டு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாள், 18 வயதுடைய பெண் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. இந்த சம்பவம் திருவண்ணாமலையில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications