Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலையில் லாரிக்குள் எட்டிப்பார்த்தால்? வாழைத் தார்களுக்கு நடுவே 2 பெண்கள்.. இரவில் இப்படியா

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: நாடு முழுவதுமே பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது.. பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து விட்டன.. பாதுகாப்பு தர வேண்டியவர்களே அத்துமீறும் அக்கிரமும் நடந்து வருகின்றன.. அந்தவகையில், திருவண்ணாமலை சம்பவம் பேரதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிபவர்கள் 32 வயதான சுந்தர், 30 வயதான சுரேஷ்ராஜ்.. இவர்கள் 2 பேருமே போலீஸ் கான்ஸ்டபிள்கள்..

Tiruvannamalai Lorry Bananas Thiruvannamalai

நேற்று விடிகாலை திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 3 மணியளவில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மினி வேன் ஒன்று வந்தது.. அதில் வாழைத்தார்கள் ஏற்றி வரப்பட்டன.. இதனால் அந்த மினிவேனை ஏந்தல் கிராம சந்திப்பு பகுதியில் நிறுத்திய கான்ஸ்டபிள்கள், அதில் சோதனை மேற்கொண்டனர்.

வாழைத் தாருக்கு நடுவே 2 பெண்கள்

அப்போது வாழைத்தார்களுக்கு நடுவில் 20 வயது இளம்பெண்ணும், 45 வயது பெண்ணும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. இரவு நேரத்தில் 2 பெண்கள் எதற்காக வேனில் இருக்கிறார்கள்? எங்கே அழைத்து செல்கிறாய்? என்று டிரைவரிடம் கான்ஸ்டபிள்கள் கேட்டுள்ளனர்..

அதற்கு டிரைவர், "அவர்கள் 2 பேரும் அம்மாவும், மகளும்.. 2 பேருமே என்னுடைய சொந்தக்காரர்கள், கோயிலில் சாமி கும்பிட வேண்டும் என்று சொன்னதால், வேனில் அழைத்து வருகிறேன்" என்றார்..

ஆனாலும் கான்ஸ்டபிள்கள், வேனிலிருந்த 2 பெண்களையும் கீழே இறங்குமாறு சொல்லி, அவர்களிடம் விசாரணையும் நடத்தினர்.. அப்போது இளம்பெண், டிரைவர் சொன்ன காரணத்தையே சொன்னார்.. "என்னுடைய சித்தியுடன் (தந்தையின் இரண்டாவது மனைவி) கோயிலுக்கு வந்தேன்" என்று இளம்பெண் கூறினார்.

வாழைத்தார்கள் வேன்

அப்போதும் கான்ஸ்டபிள்கள் அவர்களை விடாமல், தாய், மகளை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரிக்க உள்ளதாகவும், வாழை லோடு இறக்கிவிட்டு, ஸ்டேஷனுக்கு வந்து, தாய், மகளை அழைத்து செல்லுமாறும் டிரைவரிடம் சொன்னார்கள்..

பிறகு, 2 பெண்களையும் கான்ஸ்டபிள்கள் தங்கள் பைக்கில் உட்கார வைத்து, ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லாமல், ஏந்தல் கிராமத்திலிருந்த சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றார்கள்.. அங்கு, சித்தியின் கண்ணெதிரில் 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பிறகு 2 பெண்களையும் அங்கேயே சுடுகாட்டு பகுதியில் விட்டுவிட்டு கான்ஸ்டபிள்கள் கிளம்பி சென்றுவிட்டார்கள்..

மயங்கி விழுந்த பெண்

இதனிடையே இளம்பெண் அங்கேயே மயக்கடைந்து விழுந்துவிட்டார்.. இதைக்ண்டு சித்தி செய்வதறியாது கதறி அழுதுள்ளார்.. அப்போது அவரது கதறலை கேட்டு, அந்த வழியாக வந்தவர்கள் விசாரித்தபோது, நடந்த விவரத்தை கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ந்த பொதுமக்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணை அனுமதித்தனர்.. அதற்குள் திருவண்ணாமலை போலீசாருக்கும் தகவல் கிடைத்து, மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணையும் நடத்தினர்.

திருவண்ணாமலை பரபரப்பு

பிறகு, திருவண்ணாமலை மகளிர் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட கிழக்கு போலீஸ் கான்ஸ்டபிள்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.. இதில் கைதாகியிருக்கும் சுந்தர் சமீபத்தில் ஒழுங்கு நடவடிக்கையால் வெளி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டவராம்..

நைட் டியூட்டி நேரத்தில் இளம்பெண்ணை போலீசாரே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+