திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் சறுக்கிய இளைஞர்.. சட்டென காலை கவ்விய முதலை! அடுத்து நடந்த சோகம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கால்நடைகளை மேய்க்க சென்ற இளைஞர் ஒருவர், சாத்தனூர் அணையில் முதலையிடம் கடிபட்டு உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சாத்தனூர் அருகே உள்ள பெரிய மலை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் முனீஸ் (18) கல்லூரியில் பயின்று வருகிறார். கண்ணன் கால்நடைகளை பராமரித்து அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். இவரிடம் சில மாடுகள் இருக்கின்றன. இந்த மாடுகளை சாத்தூர் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் கண்ணன் மேய்து வருகிறார்.

சாத்தனூர் அணையில் எமன்
இன்று விடுமுறை என்பதால், கண்ணணின் மகன் முனீஸ் மாடுகளை மேய்க்க சென்றிருக்கிறார். வழக்கம் போல மாடுகளை சாத்தூர் அணையின் நீர் தேக்கத்தை ஒட்டியுள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டிருக்கிறார். வீட்டிலிருந்து காடு வரை மேய்ச்சலுக்கு மாடுகளை அழைத்து சென்ற களைப்பில் சோர்வடைந்த முனீஸ், முகம் கை, கால்களை கழுவ அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு நீரில் மறைந்திருந்த முதலை, முனீஸை கடித்து நீருக்குள் இழுத்து சென்றிருக்கிறது. இதனால் உயிருக்கு போராடிய முனீஸ், நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்திருக்கிறார்.
நீரில் மிதந்த சடலம்
மேய்ச்சலுக்கு சென்ற மகன் காலை உணவுக்கு வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த தந்தை கண்ணன், மகனை தேடி சென்றிருக்கிறார். வழக்கமாக மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் பகுதியிலிருந்து கொஞ்சம் தூரத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்திருக்கின்றன. ஆனால் மகனை எங்கு தேடியும் காணவில்லை. அப்போதுதான் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆண் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். சந்தேகத்தின் பேரில் சடலத்தை திருப்பி பார்த்த கண்ணனுக்கு அதிர்ச்சி. அது அவரது மகன் முனீஸின் சடலம்தான்.
நீருக்குள் இழுத்து சென்ற முதலை
இதனையடுத்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வனத்துறையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முகம் கழுவ நீர் நிலையில் இறங்கியபோது, முதலை இழுத்து சென்றிருப்பதும், அதனால்தான் மூச்சு திணறி முனீஸ் உயிரிழந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆட்கொல்லியாக மாறிய முதலை
முதலைகள் இயல்பில் வேட்டை குணம் கொண்டவை. நீருக்குள் மறைந்திருந்து, தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை அடித்து சாப்பிடுவதுதான் அதன் இயல்பு. இளைஞர் முனீஸை விலங்கு என்று நினைத்து முதலை தாக்கியிருக்கலாம். பொதுவாக முதலைகள் மனிதர்களை தாக்குவதில்லை. இதுபோன்று எப்போதாவது நடக்கும். ஆனால் இந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பிக்க வேண்டும் எனில், முதலை தனது உடலை சுற்றுவதற்குள் உடனடியாக அதன் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டும்.
தப்பிப்பது எப்படி?
கடித்த இரையிலிருந்து சதையை தனியாக எடுக்க, உடனடியாக முதலை சுற்ற தொடங்கும். இப்படி நடப்பதற்கு முன்னர் நாம் அதன் பிடியிலிருந்து தப்பிக்க முடியவில்லை எனில், கை, கால்களை இழக்க நேரிடும். சில நேரங்களில் உயிர் கூட இழக்க நேரிடலாம். ஒருவேளை முதலை சுற்ற தொடங்குவதற்கு முன்னர் அதன் பிடியிலிருந்து விடுபவில்லை எனில், நாமும் முதலையை இறுக்கமாக பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தவன் மூலம் அதனுடன் சேர்ந்து நாமும் சுற்றுவோம். இது காயங்களை மட்டுமே ஏற்படுத்தும். உயிரிழப்பையோ, உறுப்பு இழப்பையோ ஏற்படுத்தாது என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications