Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவண்ணாமலை அரசு பள்ளி மாணவிகள் சாதனை.. அக்கா ஐபிஎஸ் அதிகாரி.. தங்கை ஐ.எப்.எஸ். அதிகாரி

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு பள்ளியில் படித்த பெண், படித்து யு.பி.எஸ்.சி.தேர்வு எழுதிய நிலாபாரதி, அகில இந்திய அளவில் 24-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். கவின்மொழி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று, குன்றத்தூர் நகராட்சி ஆணையராக இருந்தார். அவரும் யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐபிஎஸ் அதிகாரியாகி உள்ளார். நான் முதல்வன் திட்டத்தால், ஒரே வீட்டில் ஒருவர் ஐஎப்எஸ் அதிகாரியாகவும், ஒருவர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் வென்றிருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று கலெக்டர், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது பலரது கனவு. அதற்கு விடா முயற்சியும், சரியான பயிற்சியும், கடின உழைப்பும் அவசியம். சரியான புரிதலுடன், சிறுவயதில் இருந்தே தயாராகுவோர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியும். அரசு பள்ளியில் படித்தாலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்பட நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் அதிகாரத்துடன் அமர முடியும். அதற்கு பலரை உதாரணமாக காட்டலாம். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அக்காள் தங்கையை உதாரணமாக குறிப்பிடலாம். இதுபற்றி பார்ப்போம்.

Tiruvannamalai Govt School Girls Excel Elder Becomes IPS Officer Younger Joins IFS Cadre

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அம்மையப்பட்டு என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேஷ். இவரது மனைவி வெண்ணிலா. முருகேஷ் தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வெண்ணிலா, சென்னை ஆவண காப்பகத்தில் இணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கவின்மொழி. அடுத்த இருவரும் இரட்டையர்களான நிலாபாரதி, அன்புபாரதி. இவர்கள் 3 பேரும் வந்தவாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்கள் ஆவர். இவர்கள் மூவரும் பிளஸ் 2வில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர் ஆவார்.

அதன்பின்னர் 3 பேருமே இளங்கலை வேளாண்மை பட்டப் படிப்பை (பிஎஸ்சி அக்ரி) முடித்துவிட்டு, யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக சென்னையில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்கள். தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்திலும் இணைந்து பயிற்சியும் பெற்றுள்ளார்கள்.

இதில் மூத்த சகோதரியான கவின்மொழி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, குன்றத்தூர் நகராட்சி ஆணையராகப் பதவியேற்றார். பின்னர் அவரும், அவரது தங்கை நிலாபாரதியும் 2024-ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றார்கள்.
நேர்காணலுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி வெளியானது. இதில் கவின்மொழி அகில இந்திய அளவில் 546-வது ரேங்கில் தேர்வாகி, ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வாகி உள்ளார். விரைவில் பயிற்சியில் சேர உள்ளார்.

இந்த நிலையில் நேற்று யு.பி.எஸ்.சி. வன பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், நிலாபாரதி, அகில இந்திய அளவில் 24-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார். ஒரே வீட்டில் அக்கா ஐ.பி.எஸ்.அதிகாரியாகவும், தங்கை ஐ.எப்.எஸ்.அதிகாரியாகவும் தேர்வானதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அரசு பள்ளியில் படித்தாலும், அகில இந்திய அளவில் புகழ் பெற்ற பள்ளியில் படித்தாலும் கல்வி ஒன்று தான். யார் எங்கு படிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை.. தங்கள் இலக்குகளை யார் சரியான நேரத்தில், சரியான முறையில் நிர்ணயித்து போகிறார்களோ, அவர்கள் ஜெயிக்கிறார்கள். அவ்வளவுதான்.. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள். நீங்கள் இதுபோல் அரசு பள்ளியில் படித்து உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் பற்றி கருத்துக்களை கமெண்ட்டில் கூறுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+