திருவண்ணாமலையில் மேஸ்திரி கேவலப்பட்டுட்டாரு.. வேலூரில் பண்ண கூடாத வேலையை பண்ணி! நீதிபதியின் சபாஷ்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மேஸ்திரி யார்? இவருக்கு தரப்பட்டிருக்கும் தண்டனை என்ன? வேலூரில் தனியார் கல்லூரி பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி துணை முதல்வர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.. 2 நாட்களுக்கு முன்புகூட சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்டுள்ளது? இதோ இதே வேலூரில் மேஸ்திரியின் காதல் வலையில் 15 வயது குழந்தை சிக்கினாள். இதற்குதான் வேலூர் நீதிமன்றம் கடும் தண்டனையை தந்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து வருகிறது. அந்தவகையில் 2 நாட்களுக்கு முன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Tiruvannamalai Mastri Vellore

அப்போது சட்டசபையில் நடந்த விவாதத்தில், அதிமுக மரகதம் குமரவேல் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.. அதாவது, திமுக ஆட்சியில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு எதிராக, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றார்.

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "2021ல், திமுக அரசு பொறுப்பேற்றதும், சமூக நலத்துறையின் முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே, பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க, போக்சோ சட்டத்தை, தமிழக அரசு திறம்பட அமல்படுத்தி வருகிறது. இச்சட்டம் குறித்து, சமூகநலம், பள்ளிக்கல்வி, காவல், சட்டம், நீதித்துறை என, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வாலும், சட்ட அமைப்புகள் மீது ஏற்பட்ட நம்பிக்கையாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து புகார் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு பாதுகாப்பான சூழல் தமிழகத்தில் உள்ளது.

போக்சோ நீதிமன்றங்கள்

18 வயதுக்கு உட்பட்டோர் காதல் திருமணம் செய்தால், அந்த வழக்குகளும், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. தமிழகத்தில் பதிவான 8,468 போக்சோ வழக்குகளில், 67.87 சதவீதம், 18 வயதுக்கு உட்பட்டோரின் காதல் திருமணம் சம்பந்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

Tiruvannamalai Mastri Vellore

தமிழகத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும், போக்சோ கைது எண்ணிக்கைகள் பெருகியபடியே வருகின்றன. அதேசமயம் போக்சோ குற்றவாளிகள் மீது நீதிமன்றங்கள் தரும் தண்டனைகளும், தீர்ப்புகளும், பொதுமக்களுக்கு ஓரளவு ஆறுதலை தந்து வருகிறது.

திருவண்ணாமலை மேஸ்திரி

நேற்றுமுன்தினம் கரூரில் ஒரே நாளில் நடைபெற்ற 2 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தரப்பட்டுள்ளது.. நேற்று முன்தினம் வேலூரிலும் 2 குற்றவாளிகளுக்கு தண்டனை தரப்பட்டுள்ளது. 16 வயது சிறுமியை சீரழித்த இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்காவல் என்றால், இந்த பலாத்காரத்துக்கு இளைஞருக்கு உதவி செய்த அவரது காதலிககு 10 ஆண்டுகள் காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

நேற்றைய தினமும் ஒரு போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார் வேலூர் நீதிபதி.. என்னாச்சு தெரியுமா? திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்.. 28 வயதாகிறது.. கட்டிட மேஸ்திரியான இவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. கடந்த 2023ம் ஆண்டு வேலூருக்கு கட்டிட வேலைக்காக வந்தார்.

வேலூர் கஸ்பா சிறுமி

அப்போது கஸ்பா பகுதியில் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த 15 வயது சிறுமியுடன் மேஸ்திரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. பிறகு சிறுமியை காதலிப்பதாக சொல்லி, அவரை கடத்தி சென்றிருக்கிறார் மேஸ்திரி.. இதனிடையே தங்கள் மகளை காணவில்லை என்று வேலூர் தெற்கு போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசாரும் சிறுமியை தேடி வந்தனர்.

விசாரணையில், மேஸ்திரி முத்துக்குமார் சிறுமியை கடத்திச் சென்றதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமியை கடத்தி சென்றது, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

அதிரடி தண்டனை தந்த நீதிபதி

இதில், குற்றச்சாட்டு உறுதியான நிலையில் முத்துக்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் மேஸ்திரி முத்துக்குமாரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோல குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கடுமையாக தரப்பட்டாலும்கூட, போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கினால் நல்லா இருக்கும், அப்போதுதான் இதுபோன்ற சபலிஸ்ட்கள், பெண் குழந்தைகள் மீது "கை" வைக்கவே நடுநடுங்குவார்கள் என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+