திருவண்ணாமலை சந்தியா.. தொண்டையில் சிக்கிய ஐஸ்கிரீம்? புதுசா இருக்கே? தலையிலடித்து கொண்டு கதறிய அப்பா
திருவண்ணாமலை: இளம்பெண்ணின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கும் நிலையில், போலீசார் அதுகுறித்த விசாரணையில் துரிதமாக இறங்கியிருக்கிறார்கள்.
வேலூர் பலவன்சாத்துக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்.. 46 வயதாகிறது.. இவரது இளைய மகள் சந்தியா.. 19 வயதாகிறது.. இவரது பாட்டி வீடு, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த வில்வராயநல்லூர் கிராமத்தில் உள்ளது.

பாட்டி வீட்டிலேயே தங்கி 10ம் வகுப்பு படித்துவிட்டு, அங்கேயே வசித்து வருகிறார்.. இவர் கோகுலகிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்தார்.. பெரணமல்லூர் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இறுதியில் இருவரும் தங்கள் காதலை வீடுகளில் சொல்லி, அவர்களின் அனுமதியுடன் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார்கள்.
என்ன நடந்தது: இந்நிலையில், சம்பவத்தன்று, சந்தியாவின் அப்பாவுக்கு, கோகுலகிருஷ்ணன் வீட்டிலிருந்து போன் வந்துள்ளது.. சந்தியா ஐஸ்கிரீம் சாப்பிடும்போது, தொண்டையில் சிக்கி இறந்துவிட்டதாக சொல்லி உள்ளார்கள..
இதைக்கேட்டதும் சந்தியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.. ஐஸ் கிரீம் சாப்பிட்டு எப்படி உயிரிழக்க முடியும் என்று குழம்பி போனார்கள்.. பிறகு, உடனடியாக கோகுலகிருஷ்ணன் வீட்டிற்கு விரைந்து வந்து மகளின் சடலத்தை கண்டு அழுது துடித்தனர்.
சந்தியா குடும்பம்: தன்னுடைய மகள் எப்படி இறந்தார்? என்று சந்தியாவின் மாமனார், மாமியார், கணவரிடம் விசாரித்திருக்கிறார் சந்தியாவின் அப்பா.. ஆனால் அவர்கள் யாருமே சரியாக பதில் சொல்லவில்லையாம். அதற்கு பிறகு, அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரிக்க போனார் சந்தியாவின் அப்பா. அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில், சந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்திருக்கிறது.
எனினும், தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்று தெரியாததால், பெரணமல்லூர் போலீசுக்கு சென்று புகார் தந்தார் செல்வக்குமார்.. ஐஸ்கிரீம் சாப்பிட்டு தொண்டையில் அடைத்துக்கொண்டு இறந்துவிட்டதாக, கணவர் வீட்டில் சொல்வதால், உண்மைக்காரணம் என்ன என்பதை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் செல்வக்குமார்.
போஸ்ட் மார்ட்டம்: இதையடுத்து, இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.. மற்றொருபுறம் சந்தியாவின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்யவும் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், சந்தியா ஐஸ் கிரீம் சாப்பிட்டாரா? அல்லது தற்கொலை செய்து இறந்தாரா? என்பது தெரியவரும்..
தற்கொலைக்கான எந்தவிதமான க்ளூவும் இதுவரை கிடைக்காததால், மர்ம மரணம் குறித்த பரபரப்பு திருவண்ணாமலையில் நிலவிவருகிறது.. மேலும், சந்தியாவுக்கு கல்யாணமாகி வெறும் 11 மாதங்களே ஆவதால் ஆர்டிஓயும் இந்த விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications