இடுப்பில் அணிந்திருந்ததை பார்த்துவிட்டு நீட் தேர்வு எழுத அனுமதி மறுத்த அதிகாரிகள்.. கெஞ்சிய மாணவர்!
திருவண்ணாமலை: நீட் தேர்வு எழுத வந்த மாணவர், இடுப்பில் வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருந்ததால் அவரை தேர்வு அறைக்குள் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து மாணவனின் தந்தை, அந்த மாணவரின் அரைஞாண் கொடியை அகற்றிய பிறகு, அவர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.
நீட் தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மாணவ மாணவிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதால் மன உளைச்சல் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு 2025- 2026 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7 ல் தொடங்கி மார்ச் 7 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.
நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 44 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது.
வழக்கம்போல் நீட் தேர்வு தேர்வு அறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவை அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் நீட் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
மாணவிகள் முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை அணியக் கூடாது. மேலும், ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள், காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில், 3,120 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருந்தார். அங்கிருந்த அதிகாரிகள் அந்த மாணவரை பரிசோதித்துவிட்டு, அவரை தேர்வு அறைக்குள் அனுமதிக்க மறுத்து உள்ளனர்.
அந்த மாணவர் எவ்வளவோ கூறியும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அந்த மாணவர் வெளியே வந்த நிலையில், அந்த மாணவனின் தந்தை, மாணவரின் இடுப்பில் இருந்த அரைஞாண் கொடியை அறுத்து அகற்றினார். அதன்பிறகு அவர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.
நீட் தேர்வுக்காக மாணவர்கள் வருடக் கணக்கில் படித்து தயாராகி தேர்வுக்கு வந்துள்ள நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மற்ற தேர்வுகளைப் போல அல்லாமல், ஆண்டுதோறும் நீட் தேர்வின்போது மாணவ மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதாக பெற்றோர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
-
கரப்பான் பூச்சி ஜனதா இன்று புனேவில் போராட்டம்! தர்மேந்திர பிரதான் விலகும் வரை விட மாட்டோம் என உறுதி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications