களமிறங்கிய அன்புமணி..செய்யாறு சிப்காட் பணிக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்.. குலுங்கிய திருவண்ணாமலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சிப்காட் விரிவாக்க திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் அரசு நிலம், விவசாயிகள் நிலம் அடங்கும். அரசு நிலத்தை விட விவசாயிகள் நிலம் தான் அதிகம் என்பாதல் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் தொடர்ந்து பணி நடந்தது. இதனால் விவசாயிகள் 120 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை நடத்திய 20 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து 6 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.
அதோடு இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டம் பாயாத 19 நபர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் திருவண்ணாமலை செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணியில் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். விவசாயிகள் மீதான நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் நிலம் பறிப்பதை கைவிடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மேல்மா கூட்டு சாலைக்கு இன்று அன்புமணி ராமதாஸ் வந்தார். இதையடுத்து அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதோடு சிப்காட் விரிவாக்க பணியை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு பாமக தலைவரான நான் தலைமை ஏற்கிறேன். தமிழ்நாடு உழவர் பேரியக்கம் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு இயக்கங்களின் நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications