திருவண்ணாமலை மலையில் பிரான்ஸ் நாட்டு பெண்.. யார் அந்த சுற்றுலா வழிகாட்டி.. ஆடிப்போக வைத்த சம்பவம்
திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற ஆன்மீக நகரங்களில் ஒன்று திருவண்ணாமலை. இங்குள்ள பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமங்களை காண ஏராளமானோர் வருகிறார்கள்.. வெளிநாட்டு பக்தர்களும் வருகிறார்கள்... அப்படி திருவண்ணாமலை வந்து மலை மீது ஏறி தியானம் செய்த போது பிரான்ஸ் நாட்டு பெண்ணிடம் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிவன் ஆலயங்களில் மிகவும் புகழ் பெற்ற ஆலயம் உள்ள ஊர் திருவண்ணாமலை. திருவண்ணாமலை நகரம் ஆன்மீகத்திற்கு பெயர் பெற்ற நகரமாக இருக்கிறது. ஏனெனில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் இங்கு தான் இருக்கிறது. இந்த கோயில் செல்லும் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆசிரமங்கள் உள்ளன. இதனை காண தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

மேலும் வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களும் ஆன்மீக சுற்றுலா பயணமாக திருவண்ணாமலைக்கு வந்து மாதக்கணக்கில் இங்கு தங்கி தியானம் செய்கிறார்கள். ஆசிரமங்களில் தங்கி சிவனை வழிபடுகிறார்கள். அப்படித்தான் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலப்பாதையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார். பின்னர் ஆசிரமங்களில் தியானம் மேற்கொண்டார். அதேபோல் கோவிலில் வழிபாடு மேற்கொண்டு வந்துள்ளார். முழுமையாக தன்னை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். அவர் அவ்வப்போது திருவண்ணாமலையில் உள்ள சுற்றுலா வழிகாட்டி ஒருவர் மூலம் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலை மீது ஏறி தியானம் செய்து வந்துள்ளார்.
அப்படித்தான் நேற்று முன்தினம் அந்த பெண், சுற்றுலா வழிகாட்டி ஒருவருடன் அண்ணாமலையார் மலைக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தியானத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணை அவருடன் சென்ற அந்த சுற்றுலா வழிகாட்டி அத்துமீறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நேற்று திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட அப்பெண் தன்னிடம் அத்துமீறிய சுற்றுலா வழிகாட்டியின் அடையாளங்களை காண்பித்தார். அதன் பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுற்றுலா வழிகாட்டியை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications