திருவண்ணாமலை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உதயநிதிக்கு விளையாட்டு துறை ஒதுக்கியது ஏன்? முதல்வர் ஸ்டாலின் ‛பலே’ ஐடியா.. விளக்கி கூறிய பொன்முடி

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் ஐடியா பற்றிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் மண்டலங்களுக்கு இடையிலான மாநில தடகள போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். அதன்பிறகு அவர் கூறியதாவது:

உலக கோப்பை வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லை! முன்னாள் வீரர் ஆதங்கம்! உறுதி தந்த அமைச்சர் உதயநிதி! உலக கோப்பை வீரர்களுக்கு மேடையில் இடம் இல்லை! முன்னாள் வீரர் ஆதங்கம்! உறுதி தந்த அமைச்சர் உதயநிதி!

இருமொழி கொள்கை தான்

இருமொழி கொள்கை தான்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை தமிழக முதலமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை இருமொழி கொள்கையே போதும். கட்டாயப்படுத்தி பிற மொழிகளை கற்றுக்க வேண்டும் என்று உள்ள புதிய கல்வி கொள்கையை தமிழக முதல்வர் எதிர்க்கிறார். மேலும் தமிழகத்திற்கு என்று ஒரு கல்வி கொள்கையை ஏற்ப்படுத்தும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்துள்ளார்.

மாணவர்களுக்கு உதவிதொகை

மாணவர்களுக்கு உதவிதொகை

தமிழகத்தில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆரம்பக்கல்வியை கிராமங்களில் கொண்டு வந்தவர் காமராஜர். 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளியை கொண்டு வந்தவர் கருணாநிதி. மேலும் அன்றைய காலகட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 400 ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி தான்.

உதயநிதி ஸ்டாலின் நியமனம்

உதயநிதி ஸ்டாலின் நியமனம்

இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் பொறியியல் கல்வியிலும் தமிழ் பாட திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். ம் அடுத்த ஆண்டு முதல் தொழில் படிப்பு கல்வியிலும் கொண்டு வரப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்புணர்வோடு இளைஞர்களை விளையாட்டு துறையில் வளர்க்க வேண்டும் என விரும்புகிறார். இந்த நோக்கில் தான் உதயநிதி ஸ்டாலினைவி லளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமித்துள்ளார்'' என்றார்.

முதல் 3 இடங்கள்

முதல் 3 இடங்கள்

திருவள்ளுவர் பல்ககைக்கழகம் மண்டலங்களுக்கு இடையேயான மாநில தடகள போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களை திருப்பத்தூர் தூயநெஞ்சக கல்லூரி, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி, ஏலகிரி தொன்போஸ்கோ கல்லூரிகள் பிடித்தன. பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி,திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி,வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரிகள் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கங்கள்,கோப்பைகள்,பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் பொன்முடி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Higher Education Minister Ponmudi said about Chief Minister Stalin's idea behind the appointment of Udhayanidhi Stalin as Sports Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X