திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொண்ட இளம்பெண்.. உண்மை காரணம் என்ன.. தி.மலை பரபரப்பு!

தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் மரணம் குறித்து விசாரணை நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: உண்மையிலேயே என்ன காரணம் என்று தெரியவில்லை.. 20 வயசு சந்தியா மண்ணெண்ணையை ஊற்றி தீயை வைத்து கொண்டு உயிரிழந்துவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் சவேரியார் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. இவரது 2வது மகள்தான் சந்தியா.. 20 வயதாகிறது.

young girl committed suicide in thiruvannamalai

ஒரு தனியார் காலேஜில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார்... சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சந்தியா திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்... அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று வீட்டிற்குள் பார்த்தபோதுதான் சந்தியா தீயில் வெந்து கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு, வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.. அப்போதே சந்தியவுக்கு 90 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுவிட்டன.. பிறகு அங்கிருந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

ஆனாலும் தீவிர சிகிச்சை தந்தும் சந்தியாவை காப்பாற்ற முடியவில்லை.. 2 ஆஸ்பத்திரியிலுமே உயிருக்கு போராடி கொண்டே இருந்ததால், போலீசாரால் சந்தியாவிடம் வாக்குமூலமும் எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வந்தவாசி போலீசார் சந்தியாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.. அப்போது, வீட்டு வேலை செய்யாததால், சந்தியாவின் அம்மா, அவரை கண்டித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த சந்தியா மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி கொண்டதாகவும் தெரியவந்தது.. எனினும், உண்மையிலேயே வீட்டு வேலை செய்யாததால்தான் சந்தியா தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+