20 சவரன் தங்கம் நகையை ஒப்படைத்த திருவாரூர் நேர்மை ஊழியர் துரை.. பரிசு மழை பொழிந்த நகைக் கடைக்காரர்
திருவாரூர்: இன்றைய அவசர உலகில் மனிதர்களுக்கு இடையே மனிதாபிமானம் என்பது அரிதாகி வருகிறது. அதிலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத நேர்மை என்பது இந்த காலத்தில் ஒரு பேரதிசயமாகவே பார்க்கப்படுகிறது.. மொத்தமும் பணம்தான் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில், வறுமையிலும் நேர்மையாக வாழக்கூடியவர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அதிசயமான நபர்தான் திருவாரூரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் துரை...!!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி குப்புசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் ராதாகிருஷ்ணன் மற்றும் முத்துலட்சுமி. இவர்களுக்கு அட்சயா தேவி என்று ஒரு மகள் உள்ளார்..

20 சவரன் தங்கம் நகை
இவருக்கு வரும் மார்ச் 8-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டுள்ளது. மகளின் திருமணத்திற்காக வாழ்நாள் முழுவதும் சிறுக சிறுகச் சேர்த்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை வாங்கியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்..
எனினும் மார்ச் மாதம் திருமணம் என்பதால், அதுவரை இந்த நகைகளை பாதுகாப்பாக வைக்க முடியாது என்பதால், திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் பத்திரப்படுத்த தம்பதி இருவரும முடிவு செய்தனர்.. இதற்காக 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ரயில் மூலம் திருவாரூர் வந்தனர்..
திருவாரூர் பஸ் ஸ்டாண்டு
திருவாரூர் நகர் பகுதியில் உள்ள விருப்பாச்சி தெருவில் தங்கியிருந்துவிட்டு, பிறகு அங்கிருந்து ஆட்டோ ஒன்றின் மூலம் திருவாரூர் புது பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பினார்கள்..
அப்போது திருமண நகைகள் இருந்த அந்த மஞ்சள் நிறக் கட்டைப் பையை ஆட்டோவின் பின்பக்க இருக்கையில் வைத்துள்ளனர். பஸ் ஸ்டாண்டு வந்ததுமே அவசரத்தில் இறங்கிவிட்டனர்.. ஆனால் அந்தப் பையை எடுக்க மறந்துவிட்டனர். ஆட்டோ சென்ற சில நிமிடங்களுக்கு பிறகுதான், தங்கள் மகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமான திருமண நகைகள் தொலைந்து போனது தெரிந்தது. இதனால் பதறிப்போன தம்பதி, செய்வதறியாது திகைத்து, கண்ணீர் விட்டு கதறினர்.
நகராட்சி ஊழியர் துரை
அதே நேரத்தில், விருப்பாச்சி நடப்பு தெருவில் நகராட்சி ஊழியரான துரை என்பவர் வழக்கம்போல் தனது தூய்மைப் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு கட்டைப் பை கேட்பாரற்றுக் கிடப்பதை கண்டார். அதனை எடுத்து பார்த்தால், பளபளக்கும் தங்க நகைகளும் வெள்ளிப் பொருட்களும் இருப்பதைக் கண்டார்.
உடனே ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல், நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்த துரை, பிறகு திருவாரூர் நகர காவல் நிலையத்திலும் இது குறித்துத் தெரிவித்தார். போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்ததுமே, அவர்களிடம் துரை, அந்த நகை பையை ஒப்படைத்தார். அதில் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் அப்படியே இருந்தன.
நேர்மைக்கு பரிசு
சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஆட்டோ டிரைவரின் தகவல் மூலம் நகையைத் தொலைத்த ராதாகிருஷ்ணன் - முத்துலட்சுமி தம்பதியினர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டனர்.. நகைகள் அடங்கிய பையை தூய்மைப் பணியாளர் துரை முன்னிலையிலேயே போலீசார் ஒப்படைத்தனர்.
தங்கள் மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த நகைகள் மீண்டும் கிடைத்ததை எண்ணி அந்தத் தம்பதியினர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நேர்மையின் சிகரமாக விளங்கிய துரையின் கைகளைப் பிடித்துக்கொண்டு தம்பதி இருவரும் கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள்..
வறுமையில் வாடினாலும் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாத துரையின் நேர்மையைப் பாராட்டி, திருவாரூர் நகர காவல் நிலையம் சார்பில் அவருக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நகைக்கடைக்காரர் தந்த ஊக்கத்தொகை
இந்நிலையில், துரையின் இந்தச் சிறந்த செயலை அங்கீகரிக்கும் வகையில், அங்குள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர், பெருத்த மரியாதையை இன்று செய்துள்ளார்.. துரை தம்பதிக்கு பொன்னாடை போர்த்தி, 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை பரிசாக வழங்கினார்.. மேலும்இ ஒப்படைத்த தூய்மை பணியாளர் துரைக்கு ரூ.15,000, வீட்டு உபயோகப் பொருட்களையும் நகைக்கடை உரிமையாளர் பரிசளித்துள்ளார்..
வறுமையிலும் நேர்மையுடன் செயல்பட்ட இந்தச் செயல், இன்னும் உலகில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது...!!!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications