கோவிலில் ஆசி வாங்க காலில் விழுந்த பெண்.. பார்த்ததும் இளையராஜா கொடுத்த ரியாக்ஷன்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் இன்று இளையராஜா சாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்கு பிறகு இளையராஜா கோவிலில் இருந்து வெளியே வந்தபோது பெண் ஒருவர் அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார். அப்போது இளையராஜா கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்தவர் இசைஞானி இளையராஜா. 80,90ஸ் காலத்தில் அவர் போட்ட பாடல்கள் இன்று வரை அனைவரின் பேவரைட்டாக இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இளையராஜாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

ilaiyaraaja ilayaraja

இளையராஜா அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தான் இளையராஜா இன்று திருப்பாம்பரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதாவது திருவள்ளூர் மாவட்டம் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலுக்கு இன்று இளையராஜா சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு இளையராஜா கோவிலில் ர் சாமி தரிசனம் செய்தார். ராமபகவான் சன்னத்தில் அர்ச்சனை செய்து வழிப்பட்டார். அதன்பிறகு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். சாமி தரிசனத்தை முடித்த பிறகு இளையராஜா கோவிலில் இருந்து வெளியே வந்தார்.

அந்த சமயத்தில் ஏராளமானவர்கள் அவரை பார்க்க சூழ்ந்து நின்றனர். கோவில் வாசலில் இருந்து இளையராஜா வெளியே வந்தபோது அவர்கள் அனைவரும் அவரை செல்போனில் வீடியோ எடுத்ததோடு, கைக்கூப்பி மரியாதை செலுத்தினர். அந்த சமயத்தில் திடீரென்று பெண் ஒருவர் இளையராஜாவை நெருங்கி சென்றார். இளையராஜாவின் காலில் விழுந்து தொட்டு வணங்கினார்.

அப்போது அப்படியே ஒரு நொடி இளையராஜா நின்றார். காலில் விழுந்த பெண் எழுந்து இளையராஜாவை கைக்கூப்பி வணங்கினார். பதிலுக்கு இளையராஜாவும் கைக்கூப்பி வணங்கிவிட்டு அங்கிருந்து சென்றார். மேலும் பலர் இளையராஜாவுடன் செல்பி எடுத்து கொண்டனர். இந்த வீடியோ இப்போது வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+