நடுங்கிப்போன திருவாரூர்.. புதருக்குள் போய் விழுந்த அதிமுக பிரமுகரின் தலை.. பட்டப்பகலில்..!
அமமுக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்டார்
திருவாரூர்: பழிக்கு பழியாக ஒரு கொலை நடந்துள்ளது.. அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை தனியாக துண்டித்து, ரோட்டோரம் இருந்த புதரில் போய் விழுந்துள்ளது.. இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ளது ஆலங்காடு கோவிலூர்.. இங்கு வசித்து வந்தவர் ராஜேஷ்... 35 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் பேபி.. 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது..
கடந்த வருடம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு ஆலங்காடு கோவிலூர் ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் ராஜேஷ் ஆவார்.

மர்ம கும்பல்
இந்நிலையில், சம்பவத்தன்று காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. முத்துப்பேட்டையை நோக்கி பைக்கில் சென்றபோது, திடீரென 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்தது.. அவர்கள் கையில் இருந்த அரிவாளாலேயே அவரது முகத்தை வெட்டினர்... இதில் ராஜேஷ் நிலைகுலைந்து போய்விட்டார்..

தலை துண்டிப்பு
பிறகு அரிவாளாலேயே அவரது தலையையும் துண்டித்தது அந்த கும்பல்.. ராஜேஷ் தலை ரோட்டோரம் கிடந்த புதருக்குள் போய் விழுந்தது. காலை 8 மணிக்கே இப்படி ஒரு சம்பவம் நடந்ததால்,பொதுமக்கள் அலறி ஓடினர்.. உடனடியாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தரவும் அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.. இந்த தகவல் ராஜேஷின் ஆதரவாளர்களுக்கு தெரிந்ததும் ஆவேசமாகிவிட்டனர்..

மறியல்
அந்த ரோட்டில் சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்து நொறுக்கினர்.. மறியல் செய்தனர்.. இதன்பிறகு விசாரணையும் துரிதமானது. அப்போதுதான், ராஜேஷ் ஒரு கொலை குற்றவாளி என்பது தெரியவந்தது. 2 வருஷத்துக்கு முன்பு, அமமுக பிரமுகர் மதன் என்பவரை கொலை செய்ததில் ராஜேஷ் தான் முதல் குற்றவாளியாம்..

பழிக்குப்பழி
தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே அதிமுகவில் இணைந்துவிட்டார் ராஜேஷ்.. அதனால், இது பழிவாங்கும் நடவடிக்கையாகவே இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காலங்காத்தாலே அதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications