பாஜக இந்து விரோத கட்சி.. அக்னிபாத்தை யாரு அதிகமா எதிர்க்கிறாங்க பாருங்க! - திருமாவளவன் லாஜிக்
திருவாரூர்: அக்னிபாத் திட்டத்தை அதிகம் எதிர்ப்பு இந்துக்கள்தான் என்றும், பாஜக இந்துவிரோத கட்சி எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
திருவாரூர் மாவட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பணிகளை மேற்கொண்டார்.

இந்து விரோத கட்சி பாஜக
பல ஊர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அவர் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து திருவாரூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அக்னிபாத் திட்டத்தை இந்துக்களே அதிகளவில் எதிர்கின்றனர். பாஜக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பது அக்னிபாத் திட்ட செயல்படுத்துவதின் மூலமும், அதனால் ஏற்படுள்ள வன்முறைகள் மூலம் தெரிகிறது.

அண்ணாமலை
சாதிய வன்கொடுமை மற்றும் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும் கண்காணிக்கவும் தனி உளவுத்துறை அமைக்க வேண்டும். அதிமுக உட்கட்சி பூசலில் கருத்து தெரிவிக்க விடுதலை சிறுத்தை கட்சிக்கு விருப்பமில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக எந்தவித ஆதாரமும், முகாந்திரமும் இல்லாமல் தமிழக அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டி வருகிறார்.

மக்களே எதிர்க்கட்சி
காவல் நிலைய வதை கொலைகள் குறித்து விசாரிப்பதற்கும் தனி நீதிபதி கொண்ட ஆணையம் அமைக்க வேண்டும். மோடி தங்கள் கட்சிக்கு சரியான எதிர்க்கட்சி இல்லை என்று கூறுகிறார். காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்து கொண்டு அவர் பேசுகிறார். பாஜகவுக்கு சரியான எதிர்க்கட்சி மக்கள்தான். விரைவில் மக்கள் சரியான பாடத்தை பாஜகவுக்கு புகட்டுவார்கள்." என்றார்.

சுவாரஸ்ய நிகழ்வு
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, திருமாவளவனின் கேமராமேன் தமிழ் இமயன் வைத்திருந்த கேமராவை வாங்கி "என்னை நீ புகைப்படம் எடுக்கிறாய், உன்னை நான் புகைப்படம் எடுக்கிறேன்." என்று கூறி தொண்டர்கள் தனக்கு அணிவித்த மலர் கிரீடத்தை புகைப்படக் கலைஞர் தமிழ் இமயனுக்கு அணிவித்து புகைப்படம் எடுத்து மகிழ்வித்தார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
தவெக அமைச்சரவையில் வெளியேறுவோம்.. திருமாவளவன் மீண்டும் ட்விஸ்ட்.. விஜய் ஷாக்












Click it and Unblock the Notifications