மதக்கலவரம் செய்வோம்.. மசூதிகளை இடிப்போம்.. ஆடியோ லீக் -பாஜக நிர்வாகி மீது வழக்கு
திருவாரூர்: மதக்கலவரம் செய்ய வேண்டும் என்றும், சைலண்டாக அடிக்க வேண்டும் எனவும் மன்னார்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் செந்தில் ராஜ்குமார் லட்சுமணன். பாஜகவின் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக இருக்கும் இவர், மதக்கலவரத்தை தூண்ட வேண்டும் என்று பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் பேசிய செந்தில் ராஜ்குமார் லட்சுமணன்," பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நமக்கு உதவியாக உள்ளார். வழக்கறிஞர்களுடன் நமக்கு உதவியாக இருக்கிறார்.

அடிக்க வேண்டும்
நாம் உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியம் இல்லை. கட்சி மேடைகளில் இந்து முன்னணி போன்று பேசக்கூடாது. திமுகவுக்கும் நமக்கு வேறுபாடு உள்ளது. நாம் அரசியல் கட்சியை போன்று பேச வேண்டும். முஸ்லீம்களை அடிக்க வேண்டும் என்றால் அடிக்க வேண்டும். ஆனால் சைலன்டா அடிக்க வேண்டும். வைலெண்டா அடிக்க கூடாது.

மத கலவரம் செய்வோம்
உணர்ச்சிவசப்பட்டு ஒருவனை கட்சி மேடையில் திட்டினால் என்றால் என்ன நடக்கும்? நம்ம மக்களே பின்னால் போய்விடுவார்கள். அதிகாரத்தில் உட்கார்ந்து அவர்களை வளர விடாமல் அடிக்க வேண்டும். அதற்கான அடித்தள் இருக்கால் மத கலவரம் செய்ய வேண்டும். மதத்தை அப்புறப்படுத்திட்டு அதிகாரத்திற்கு வரும் வரை உள்ளே வைத்தே தாக்க வேண்டும்.

மசூதிகளை இடிக்க வேண்டும்
நபியை திட்டுவதால் அவர்கள் அடங்கி விட்டார்களா?. ஒட்டுமொத்த பள்ளிவாசல்களையும் இடித்து தள்ள வேண்டும். அதற்கு நாம் அதிகாரத்திற்கு வர வேண்டும். அத விட்டுட்டு அவசரப்பட்டால் ஒன்றும் செய்ய முடியாது. நானும் சில நேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிடுகிறேன்." என்று கூறுகிறார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் வழக்குப்பதிவு
இது தொடர்பாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் கடந்த 7 ஆம் தேதி புகாரளித்தது. அதன் அடிப்படையில், பாஜக நிர்வாகி செந்தில் ராஜ்குமார் லட்சுமணன் மீது 5 பிரிவுகளின் கீழ் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர்.
-
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications