Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலினின் கனவு...கலைஞர் கோட்டம்..சகோதரி செல்வியோடு இணைந்து திறந்த அந்த தருணம்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி" என்று சொல்வார்கள். தனது தந்தையின் நூற்றாண்டு விழாவில் அவரது பெயர் சொல்லும் படி ஒரு கோட்டம் அமைக்க வேண்டும் என்பது முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினின் கனவு. அந்த கனவை தற்போது நனவாக்கியுள்ளார். திருவாரூரில் தனது தந்தைக்காக பிரம்மாண்டமாக ஆழித்தேர் போன்ற அமைப்பில் கலைஞர் கோட்டம் அமைத்து தனது சகோதரி செல்வியோடு இணைந்து திறந்து வைத்துள்ளார்.

திருவாரூர் அடுத்த காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ. 12 கோடி மதிப்பில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் 2 திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவச் சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் இந்த கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

Chief Minister MK Stalins dream to open Kalaignar Kottam along with his sister Selvi

இந்த திறப்பு விழாவிற்கு அனைவரும் வர வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார் மு.க ஸ்டாலின்.
சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்' என்ற அரசியல் இலக்கணம் வகுத்துத் தந்த தலைவரல்லவா நம் முத்தமிழறிஞர் கலைஞர். அதனால், சொல்லாக மட்டும் இல்லாமல் செயல் வடிவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது கலைஞரின் நூற்றாண்டு. ஓராண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்ற முனைப்புடன் நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி, தனது சளைக்காத போராட்டத்தினால் இந்தியாவுக்கே வழிகாட்டும் மூத்த தலைவராக உயர்ந்து நின்ற முத்தமிழறிஞர் கலைஞரை நமக்குத் தந்த திருவாரூரில், அவரது அன்னையார் - எனது பாட்டி அஞ்சுகம் அம்மையார் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம்.

Chief Minister MK Stalins dream to open Kalaignar Kottam along with his sister Selvi

நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை நவீனத் தொழில்நுட்பத்துடன் ஓடச்செய்தவர் நம் தலைவர் கலைஞர். அந்தத் திருவாரூரில், தேர் போன்ற வடிவில் அவருக்குக் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டத்தில் அவரது திருவுருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை - என் தாத்தா முத்துவேலரின் பெயரிலான நூலகம், இரண்டு திருமண மண்டபங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல. உறுதிமிக்க போராட்டத்தால் எதையும் சாதிப்போம். அந்த உணர்வுடன் கொள்கை வீரர்களாம் கழக உடன்பிறப்புகளை, ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன் என்று அழைப்பு விடுத்திருந்தார் மு.க ஸ்டாலின். இந்த அழைப்பினை ஏற்று அலைகடலென திமுக தொண்டர்கள் திருவாரூரில் திரண்டுள்ளனர். திருவாரூர் நகரமே இன்றைய தினம் திருவிழா கோலம் பூண்டது.

தனது தந்தையின் நூற்றாண்டு நினைவாக கட்டிய கலைஞர் கோட்டத்தை தனது கரத்தாலும் தனது சகோதரி செல்வியின் கரத்தோடு இணைந்து திறந்து வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். இந்த கலைஞர் கோட்டத்தில் பல்வேறு சிறப்புகள் உள்ளன. கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் நினைவுகளை போற்றக்கூடிய பழைய புகைப்படங்கள், அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், கலைஞர் அடைக்கப்பட்டிருந்த சிறை போன்ற கட்டமைப்புகள், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பும் வகையில் சிறிய திரை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் 2 திருமண மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.

நூலகத்தை திறந்து வைத்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிற்கு கருணாநிதியின் புகைப்படங்களைப்பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் எடுத்துக்கூறினர். தனது பல ஆண்டு கனவான கலைஞர் கோட்டத்தை சிறப்பாக கட்டி அதை தனது கரத்தாலேயே மகிழ்ச்சியோடு திறந்து வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+