திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டெர்லைட் மற்றும் ஹைட்ரோகார்பனுக்கு எதிர்ப்பு.. திருவாரூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருவாரூர் பேருந்து நிலையம் அருகே திமுக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் பேருந்து நிலையம் அருகே திமுக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தின் இரண்டு பெரிய முக்கிய பிரச்சனைகளாக ஸ்டெர்லைட் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டம் தலைதூக்கி இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்று சூழ்நிலை நிலவி வருகிறது.

DMK cadres are protesting against Hydro Carbon and Sterlite in Thiruvarur

ஸ்டெர்லைட்டிற்கு எதிரான தடுப்புகள் எல்லாம் தகர்ந்துவிட்டதால், ஆலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் செயல்பாட்டிற்கு வரலாம். அதேபோல்தான் மக்களை பாதிக்கும் இன்னொரு திட்டமான ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டமும் ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிறுவனமான வேதாந்தா நிறுவனத்திடம்தான் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இது தமிழக மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது திருவாரூர் பேருந்து நிலையம் அருகே திமுக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஸ்டெர்லைட் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தால் திருவாரூரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. 200க்கும் அதிகமான திமுகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கட்சியினர் மட்டுமில்லாமல் பொதுமக்கள் சிலரும் கூட போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக தஞ்சையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK cadres are protesting against Hydro Carbon Project and Sterlite factory in Thiruvarur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X