பேனர் பஞ்சாயத்து.. தட்டிக் கேட்ட இளைஞரைத் தாக்கிய திமுக கவுன்சிலர்.. திருவாரூரில் நடந்த கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் அருகே இளைஞர் ஒருவரை வீடு புகுந்து திமுக கவுன்சிலர் தாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது வீட்டின் முன்பாக பேனர் வைக்கப்பட்டதை எதிர்த்து கேள்வி கேட்ட இளைஞரை திமுக கவுன்சிலர் மற்றும் அவரின் ஆட்கள் தாக்கியதோடு, வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி இருக்கின்றனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் கிஷோர். இவரின் சித்தி மகாலட்சுமி என்பவர், அந்த பகுதியில் பழைய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடந்து வந்துள்ளது. சித்திக்கு உதவியாக கிஷோரும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பாக திமுகவினர் பேனர் வைத்ததாக தெரிகிறது.

Thiruvarur dmk Councillor Annamalai

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமனின் ஆதரவாளர்கள் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இதனைப் பார்த்த கிஷோர், உடனடியாக பிளக்ஸ் போர்டு வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக புருஷோத்தமனின் ஆட்கள் மற்றும் கிஷோர் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் திமுக கவுன்சிலர் புருஷோத்தமனுக்கு தெரிய வர, உடனடியாக தனது ஆதரவாளர்கள் 12 பேருடன் சேர்ந்து கிஷோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். நேராக வீட்டிற்குள் புகுந்த அனைவரும் கிஷோரை சரமாரியாக தாக்கியதோடு, சுமார் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கி இருக்கின்றனர். வீட்டின் மாடியில் கிஷோரை கவுன்சிலரின் ஆட்கள் தாக்கும் வீடியோ வெளியாகியது.

இந்த விவகாரம் தொடர்பாக கிஷோர் நேரடியாக திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், புருஷோத்தமன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கிஷோர் மீது புருஷோத்தமனும் புகார் அளித்தார். இதனால் இரு தரப்பு மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தின் வீடியோவை பகிர்ந்துள்ள தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுகவில் அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை, அராஜக அரசியலையே ஒரு கலாச்சாரமாக வைத்துள்ளனர். கொடூரமான வன்முறையில் ஈடுபட்ட பின், வெறுமன மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+