திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்.. காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு.. எடப்பாடி கண்டனம்!

Google Oneindia Tamil News

திருவாரூர்: முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தும் நிலையில் இது அரசியல் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

Recommended Video

    ADMK முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை... என்ன காரணம்? *Politics

    தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுகவின் பல்வேறு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    பாம்பன் புதிய ரயில் பாலம்..கடலுக்குள் பிரம்மாண்ட தூண்கள் அமைக்கும் பணி நிறைவுபாம்பன் புதிய ரயில் பாலம்..கடலுக்குள் பிரம்மாண்ட தூண்கள் அமைக்கும் பணி நிறைவு

    சமீபத்தில் அதிமுகவின் எம்ஆர் விஜயபாஸ்கர் மாஜி அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

     காமராஜ் வீட்டில் சோதனை

    காமராஜ் வீட்டில் சோதனை

    இதன் தொடர்ச்சியாக இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றன். மன்னார்குடியில் உள்ள அவரது வீடு, அலுவலகம், குடும்பத்தினரின் வீடு, உறவினர்களின் வீடு என மொத்தம் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சோதனை செய்வது ஏன்?

    சோதனை செய்வது ஏன்?

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், ‛‛முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவுமான காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி குடும்பத்தினர், உறவினர்கள் பெரியில் ரூ.58 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார். இதுதொடர்பாக காமராஜ் மகன்கள் இனியன், இன்பன் மற்றும் சந்திரசேகரன், கிருஷ்ணமூதர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

    எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

    அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் தலைத்தூக்கி உள்ளது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான ஆர் காமராஜின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் வீடு, அலுவலகங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பழிவாங்கும் செயல்

    பழிவாங்கும் செயல்

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛அதிமுகவை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் மீதும், அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது. அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Edappadi Palaniswami criticized the anti-corruption police raiding the house of former minister R Kamaraj as a political revenge move.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X