சனாதனமா.. கிலோ என்ன விலை? ஆளுநர் அப்படி பேசி இருக்கக்கூடாது - டிடிவி தினகரன்
திருவாரூர்: சனாதனம் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருக்கக்கூடாது என்றும், பக்தி உள்ளவர்களே சனாதனம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையில் உள்ளது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அமமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பக்தியில் உள்ளவர்களே சனாதனம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையில் உள்ளது.

ஆளுநர் தவிர்த்திருக்க வேண்டும்
அரசியல்வாதிகளே இதைப் பற்றி பேசுவதை தவிர்க்க கூடிய நிலையில் ஆளுநர் அதுகுறித்து பேசியிருக்க கூடாது. சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி அதிமுகவை நிச்சயம் கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. " அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவுக்கு இடம் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது
இதற்கு பதிலளித்த அவர், "காலம்தான் பதில் சொல்லும். நான் ஒரு ஜோதிடரும் அல்ல.. அரசியல் வல்லுநரும் அல்ல.. சாதாரண அரசியல்வாதி." என்றார். எம்.பி. சுப்பிரமணியசாமி திமுக பிராமணருக்கு எதிராக செயல்படுவது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "திமுக எல்லோருக்கும் எதிராக செயல்படுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக செயல்படுகிறது.

திராவிடர்களுக்கு தலைகுனிவு
தேர்தல் நேரத்தில் சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. இதே போல மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் என்று ஸ்டாலின் சொல்வது நம்மை போன்ற திராவிடர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு லாக் அப் மரணங்கள் நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என தெரிகிறது.

காவல்துறையை முறைப்படுத்த வேண்டும்
முதலில் வெற்று விளம்பரங்கள் வெற்று திட்டங்களை அறிவிக்காமல் காவல்துறையை சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு ஆட்சிக்கு ஆபத்து வரும். கர்நாடக அரசு மேகதாது அணை விவகாரத்தில் திட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ள விவகாரத்தில் காவிரி விவகாரத்தில் திமுக எப்போதும் கோட்டை விடும். உரிய முறையில் அணுகி நீதிமன்றம் மூலம் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவாக இருப்பார்கள்." என்றார்.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications