திணறடித்த கனமழை திருவாரூரை தொடர்ந்து சிவகங்கைக்கும் விடுமுறை.. மாணவர்களுக்கு பறந்த அறிவிப்பு!
திருவாரூர்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. திருவாரூர் மாவடத்தில் நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை கனமழை பெய்து வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சிவகங்கை மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்கிறதோ, அந்த பகுதிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் விடுமுறையை அறிவிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலவலர் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு பருவங்கள் பரவலான மழைப்பொழிவை கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும மழைப்பொழிவை கொடுக்கும். இதில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொங்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு மட்டுமே மழையை கொடுத்தது. வட மற்றும் டெல்டா மாவட்டங்கள் காய்ந்து கருவாடாகியது. குறிப்பாக தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை.

இப்படி இருக்கையில் தற்போது வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை தொடங்கி வங்கக்கடல் ஓரம் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில் அதிகபட்சமாக மழை பெய்திருக்கிறது. அதே நேரம் நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று திருவாரூர் உட்பட 13 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை விடுத்திருந்தது. மட்டுமல்லாது காலை 10 மணி வரை திருவாரூருக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில், கனமழை காரணமாக இன்று மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவ.9ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவ.10ல் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவ.10ல் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications