கன மழை எதிரொலி.. அதிகாலையில் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்.. மனைவி பலி, கணவர் தப்பினார்
Recommended Video

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் பகுதியில் இன்று அதிகாலை கன மழையால் பாதிக்கப்பட்டிருந்த வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் மனைவி பலியானார். கணவர் படுகாயமடைந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் வீசிய கஜா புயலின் காரணமாக புயல் வீசிக் கொண்டிருக்கும் போது பல்வேறு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. மரங்கள் வீட்டின் மீது விழுந்து சேதத்தை உண்டாக்கின. இந்த நிலையில் புயல் கரையைக் கடந்து நேற்று காலை முதல் அமைதியான சூழல் நிலவிய போதும் சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக வலுவிழந்த வீடுகள் தற்போது இடிய தொடங்கியுள்ளது.

அதன் வெளிப்பாடாக திருவாரூரை அடுத்த அடியக்கமங்கலத்தில் மேட்டு தெருவில் வசித்து வரும் முருகேசன் வீட்டின் முன் பக்க சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் சிக்கிக் கொண்டனர்.
இதில், சம்பவ இடத்திலேயே லதா உயிரிழந்தார். முருகேசன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

மாவட்டம் முழுவதும் கஜா புயலின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து 8 பேரும் மரம் விழுந்து ஒருவரும் மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications