ஷாக்! அரசுப் பள்ளி கதவுகளில் “அசிங்கம்”: மனித மலம் பூசிய சமூக விரோதிகளை தண்டிக்க முத்தரசன் கோரிக்கை!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறைக் கதவுகளில் மனித மலம் பூசப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் வகுப்பறை பூட்டுகளில் மனித மலம் பூசப்பட்டதைக் கண்டித்தும், குடிநீர் தொட்டி சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பெற்றோரும் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி கதவுகளில் மனித மலம் பூசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாயிற்கதவில் மனித கழிவு பூசப்பட்ட செய்தி அதிர்ச்சியோடு அறுவெறுப்பு ஊட்டுகிறது. நாகரிகமற்ற இச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு, இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட அதிர்வுச் சூழலில், மத்தூர் பள்ளியில் மனித கழிவு பூசப்பட்டது மேலும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்த போது பல இடங்களில் மனித கழிவு சிதறி கிடப்பதும், மதுபாட்டில்கள் பரவிக் கிடப்பதும் தெரியவருகிறது. அத்துடன் உரிய சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது.
ஒரு பள்ளிக்கூடத்திற்கு தேவையான குறைந்தபட்ச உட்கட்டமைப்புகள் இல்லாதது குறித்து ஏற்கனவே மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் மீது உரிய கவனம் இல்லாதது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு பள்ளிக்கல்விக்காக, பள்ளிக்கூடங்களுக்காக பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத் திட்டம், ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (சிஎஸ்ஐடிஎஸ்) என திட்டங்களை செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு, வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தல் குறித்த அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் (எஸ்எம்சி) பள்ளி மேலாண்மைக்குழு ஏற்படுத்தப்பட்டு அதில் உள்கட்டமைப்புக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் இவர்களோடு ஊராட்சிமன்ற உறுப்பினர் இணைந்து பள்ளி உள்கட்டமைப்புக்கு செயலாற்ற வழிவகுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஏற்பாடுகள் இருப்பினும், எத்தகைய முயற்சிகளும் மத்தூர் பள்ளியில் ஏற்படுத்தாதது ஏற்புடையதல்ல. திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலகம், மாநில கல்வி அலுவலகம் உடனடி தலையீடு செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாட்டிலேயே கல்வித் துறையில் சிறந்தோங்கும் தமிழ்நாட்டின் "கல்வி நற்கூறுகளை" மேலும் முன்னெடுக்க வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications