கஜாவிடம் சிக்கி சேதமடைந்த கருணாநிதி வீடு.. திருக்குவளைக்கு விரைந்தார் மு.க.அழகிரி
கஜா புயலினால் கருணாநிதியின் வீடு சேதமடைந்துள்ளது.
Recommended Video

திருவாரூர்: கஜா புயல் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டை கூட விட்டு வைக்கவில்லை. திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்து, வளர்ந்த வீட்டை கஜா ஒரு புரட்டு புரட்டி போட்டு விட்டு போய்விட்டான்!
தமிழகத்தை தாக்கிய புயலினால் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சேதங்களோ ஏராளமாக ஏற்பட்டுள்ளது.
எண்ணற்றோரின் வீடுகளின் குடிசைகளும், ஆஸ்பெஸ்டாஷ் ஷீட்டுகளும் காற்றில் சுழன்று பறந்தன. பல வீடுகள் தரை மட்டமானது. பல வீடுகள் பலத்த சேதம் அடைந்தது.

பாரியம்பரிய வீடு
அதில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி பிறந்து வளர்ந்த வீடும்! பல சிறப்புகளை பெற்று, பாரம்பரியத்துடன் திகழும் வீடு இது. எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளை உருவாக்கி கொடுத்த இடம் இது!

நெருக்கமான இடம்
கருணாநிதியின் மனசுக்கு ரொம்ப நெருக்கமான இடம் இந்த வீடுதான்!! திருவாரூருக்கே பெருமை தேடி தந்த இடம்தான் கருணாநிதியின் இந்த வீடு! இவ்வளவு சிறப்புக்கள் நிறைந்த வீடு, இப்போது புயல் அடித்ததன் காரணமாக உருக்குலைந்து காணப்படுகிறது. எப்பவுமே வருஷா வருஷம் பெயிண்ட் அடித்து முறையாக பராமரிக்கப்பட்டதுதான் இந்த வீடு.

தென்னை மரம்
இந்த வீட்டில் பெருமை வாய்ந்த நூலகமும் உண்டு. இப்படிப்பட்ட வீடு இன்று சிதைந்து காணப்படுகிறது. வீட்டின் மீது ஒரு தென்னை மரம் படுத்து வீழ்ந்து கிடக்கிறது. வீட்டின் வாசற்படியில் தொங்கவிடப்பட்ட பெயர்பலகை நொறுங்கி சாய்ந்து ஒரு பக்கமாக தொங்கி கொண்டிருக்கிறது. இது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்திலும் வைரலாகி வருகின்றன.

அழகிரி விரைந்தார்
சிதைந்து, பாழ்பட்டு கிடக்கும் இந்த வீட்டை பார்த்ததும், திமுகவினர் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர். எப்படியாவது தங்கள் தலைவரின் வீட்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். வீடு இப்படி சின்னாபின்னமாகி விட்டதே என்பதை அறிந்து அழகிரி இப்போது திருக்குவளை வீட்டுக்கே வந்துவிட்டார். அதை அழகிரி இனி பராமரிக்க போவதாக சொல்லப்படுகிறது.

தொண்டர்கள் நிம்மதி
இன்னொரு பக்கம் ஸ்டாலினும், திருக்குவளை வீட்டை சீர் செய்யும்படி உள்ளூர் ஆட்களுக்கு சொல்லி இருக்கிறாராம். இப்படி இருவருமே தங்களது பூர்வீக வீட்டை சரி செய்யும் வேலையில் இறங்கிய பிறகுதான் திமுக தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

எம்ஜிஆர் வீடு
இப்படித்தான் கடந்த 2015 சென்னை வெள்ளத்தின்போது எம்.ஜி.ஆர் வசித்து வந்த ராமாவரம் வீடு சேதமடைந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் வீடு தற்போதைய புயலுக்கு சேதமடைந்துள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications