கருணாநிதியின் ஆட்சி முறை தேசிய அளவில் பின்பற்றக்கூடியது.. தேஜஸ்வி யாதவ் புகழாரம்
திருவாரூர்: கருணாநிதி கடைபிடித்த சமூக நீதி, சமத்துவம் போன்ற கொள்கைகளை தேசிய அளவில் செயல்படுத்துவது அவசியம் என்று கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார். பின்னர் விழாவில் பேசியதாவது:- சமூக நீதிக்கான நமது வருங்கால போராட்டங்களுக்கு கருணாநிதியின் கொள்கைகள் வழிகாட்டும். கருணாநிதி கடைபிடித்த சமூக நீதி, சமத்துவம் போன்ற கொள்கைகளை தேசிய அளவில் செயல்படுத்துவது அவசியம்.

திராவிட கருத்தியலை நிலை நிறுத்தியதில் முக்கிய தலைவராக கருணாநிதி விளங்கினார். கருணாநிதியின் கொள்கைகளும் சிந்தனைகளும் இன்றளவும் அவசியமாக இருப்பதை நினைவு கூறவே இங்கு கூடியிருக்கிறோம். கருணாநிதியின் சிந்தனைகள் அடுத்தத்தடுத்த தலைமுறையிடம் செல்வாக்கு செலுத்தி வருகிறது. சமூக நீதியை காப்பதில் மிகப்பெரும் பங்காற்றியவர் கருணாநிதி சாதி ரீதியான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என வலியுறுத்தினார்" என்றார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications