திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி தனியார் கேண்டீனில் இட்லி சாம்பாரில் என்ன அது.. ஆடிப்போன கர்ப்பிணி
திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கௌசல்யா என்ற கர்ப்பிணி பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரது தந்தை ஜெயராமன் தனது மகளுக்கு இட்லி வாங்க மருத்துவமனைக்குக்குள் உள்ள தனியார் கேண்டீனுக்கு வந்துள்ளார். அங்கு இட்லி பார்சல் வாங்கி உள்ளார். அதில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ந்து போன ஜெயராமன் புகார் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள வடுககுடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் கூலியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் கௌசல்யாவுக்கு 32 வயது ஆகிறது. இவருக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். கௌசல்யா தற்போது நிறைமாத கர்ப்பணியாக இருக்கிறார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓட்டல் சாப்பாடு
இந்நிலையில், இன்று காலை கௌசல்யாவிற்கு உணவு வாங்குவதற்காக அவரது தந்தை ஜெயராமன், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் உள்ள ஒரு தனியார் உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, நான்கு இட்லியை குழம்புடன் பார்சல் வாங்கியவர், மகள் கௌசல்யாவுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். பார்சலை திறந்து இட்லியை சாப்பிட தொடங்கிய கெளசல்யா, முதல் இட்லியை சாப்பிட்டுள்ளார். இரண்டாவதை சாப்பிட்டபோது தான், தனக்கு ஓட்டலில் தந்த சாம்பாரை எடுத்து ஊற்றியுள்ளார்.
குட்டி பல்லி
அதில் இருந்து ஏதோ ஒரு இறந்த உயிரினம் விழுந்ததைக் கண்ட அவர், உடனடியாக அது என்ன என்பதை பார்க்க முற்பட்டபோது அதிர்ச்சியடைந்தார். அவர் ஊற்றிய சாம்பாரில் இறந்த நிலையில் ஒரு குட்டி பல்லி இருந்ததை கண்டார். உடனே தந்தையிடம் நடந்ததைக் கூறி, சம்பந்தப்பட்ட உணவகத்தில் இதுகுறித்து கேட்டு வரும்படி கெளசல்யா கேட்டுள்ளார். அந்த இட்லியுடன் உணவைத்திற்கு சென்ற ஜெயராமன், இதுகுறித்து அதன் உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் தவறுதலாக விழுந்திருக்கலாம் என்று அலட்சியமாக பதிலளித்தாராம்.
வாக்குவாதம்
இதனால் கோபமடைந்த ஜெயராமன், உணவக உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஜெயராமனுடன் சக நோயாளிகளின் உறவினர்களும் அங்கு கூடினார்கள். இதையத்து போலீசார் அங்கு வந்தனர். சமாதானம் செய்த அவர்கள், மருத்துவமனை நிலைய அலுவலரிடம் புகார் தெரிவிக்குமாறு கூறினார்கள்.
மருத்துவமனை விளக்கம்
இது குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) ராஜேந்திரன் கூறுகையில் "தனியார் உணவகம் மீது மருத்துவமனை நிலைய அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினரிடத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நான் நேரடியாக உணவக உரிமையாளரிடம் விசாரணை நடத்த உள்ளேன். அந்த விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications