17 வயதுதான்.. உடம்பெல்லாம் காயங்கள்.. வயலில் சிதைந்து போய்.. கொடூரமாக வேட்டையாடப்பட்ட மெளனிகா!

17 வயது மாணவி படுகொலை செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: 17 வயது மௌனிகாவின் உடம்பெல்லாம் காயங்கள்.. வயல்வெளியில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது திருவாரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவர் ஒரு விவசாயி.. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.. மகள் பெயர் மௌனிகா.. இவர் பிளஸ் 2 தேர்வு எழுதிஉள்ளார்.

 lockdown crime: 17 year old girl murder near thiruvarur

இந்நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் இன்று சடலமாக கிடந்தார் மௌனிகா.. உடலில் ஏராளமான காயங்கள் தென்பட்டன.. இன்று காலை வயலுக்கு சென்ற கிராம மக்கள் மௌனிகாவின் சடலத்தை பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விரைந்துவந்த போலீசார் மௌனிகாவின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தது.. மௌனிகா எதனால் இறந்தார் என்று தெரியவில்லை... இவரது மரணம் நிறைய மர்மத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்து தடயங்களை சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது. நேற்று மதுக்கடைகள் திறந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.. அந்த வகையில் மௌனிகாவின் மரணமும் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.. வயலில் காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மேலும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+