விசிலடிக்க போகும் குக்கர்.. மன்னார்குடியில் பெரிய சம்பவம் லோடிங்! விஜய் குஷி!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் அதிக இடங்களை ஜெயித்திருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான தொகுதிகளை வெற்றி பெறவில்லை. இப்படி இருக்கையில் மன்னார்குடியிலிருந்து விஜய்க்கு குட் நியூஸ் ஒன்று வந்திருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் 118 தொகுதிகளில் வெற்றி கட்சி, ஆட்சி அதிகாரத்தில் உட்காரலாம். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சுமார் 108 இடங்களை வென்றிருக்கிறது. எனவே ஆட்சி அமைக்க தேவையான 10 பேரை எங்கிருந்து கொண்டுவருவது என விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.

Mannargudi

விசிக+இடதுசாரிகள்

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்த்தால், 11 பேர் கிடைப்பார்கள். எனவே இதை வைத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். இது தவிர பாமகவை உள்ளே கொண்டு வந்தால் கூடுதலா பலம் கிடைக்கும். ஆனால், பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது. எனவே மார்ஜின் நம்பரை வைத்து ஆட்சியை நடத்த வேண்டி வரும்.

அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்கள்

இதுவும் இல்லையெனில், அதிமுகவிலிருந்து சில எம்எல்ஏக்கள் பிரிந்து செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவின் மொத்த எம்எல்ஏக்களின் பலம் 47. இதில் 32 எம்எல்ஏக்கள் பிரிந்து வந்தால்.. அதாவது 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றால், கட்சி தாவல் தடை சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க முடியாது. மறுபுறம் விஜய்யும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.

மன்னார்குடி குட்நியூஸ்

இப்படியான பேச்சுகள், யூகங்கள் எழுந்துக்கொண்டிருக்க, மன்னார்குடியிலிருந்து விஜய் தரப்புக்கு குட் நியூஸ் சென்றிருக்கிறது. அதாவது, அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த அக்கட்சியின் ஒரே எம்எல்ஏவான காமராஜ் விஜய் கட்சிக்கு தாவ வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

நிறைய எம்எல்ஏக்கள் இருந்தால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லுபடி ஆக 3ல் 2 பங்கு விதி கட்டாயம். ஆனால் ஒரே எம்எல்ஏவுக்கு இது பொருந்துமா? என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

கட்சித் தாவல் தடை சட்டம்

ஒரு கட்சியில் ஒரே ஒருவர் மட்டும் வெற்றி பெற்று எம்எல்ஏவாகினாலும், அவர் கட்சி மாறினால் அவருக்கும் இந்த விதி பொருந்தும் என்று சட்டம் சொல்கிறது. அப்படியெனில், அந்த நபர் மீது நடவடிக்கை பாயாது. ஒரு கட்சியில் இருக்கும் ஒரே எம்எல்ஏ அவர்தான் என்பதால், அவர் பிரிந்து சென்றால் அது 100% (அதாவது 2/3 பங்குக்கு மேல்) எனக் கணக்கிடப்படும். எனவே, அவர் மற்றொரு கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டால், அவர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது, அவரது பதவி பறிபோகாது.

வாய்ப்புகள் என்ன?

அவர் வெறுமனே கட்சியில் இருந்து விலகிச் செல்லாமல், வேறொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியுடன் தனது 'சட்டமன்றக் கட்சியை' இணைப்பதாக முறைப்படி அறிவிக்க வேண்டும். எனவே மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் விலக வாய்ப்புகள் அதிகம்.

இருப்பினும் விஷயமறிந்தவர்கள், அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள். கமராஜ் இதற்கு முன்னர் அதிமுகவில் இருந்தார். அதிலிருந்து டிடிவி தினகரன் பிரிந்த வந்தபோது, அவருடன் வந்து கடைசி வரை, எல்லா சிக்கல்களையும் கடந்து உடன் நின்றார். இப்படி நின்றதால்தான் மன்னார்குடியில் காமரஜுக்கு சீட் வழங்கப்பட்டது. எனவே அவ்வளவு சீக்கிரத்தில் அவர் கட்சி தாவ மாட்டார் என்று சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+